social reform
சமூகச் சீர்திருத்தம்
தமிழ் விளக்கம்
சீர்திருத்தம் என்றால், மக்கள் அநீதிக்குள்ளாவதையும், மோசமாக நடத்தப்படுவதையும் அகற்றி, முன்னேற்றத்திற்கு வித்திடுவது. தவறுகளை மாற்றியோ அல்லது திருத்தியோ நிலைமையை மேம்படுத்துவது. சமூகச் சீர்திருத்தம் என்பது, சமூக நிறுவனங்கள் / அமைப்புகள் செயல்படும் அல்லது நிர்வகிக்கப்படும் விதத்தை திருத்தியமைத்து, சமூக நீதியையும், சமூக நலனுக்குகந்த மாற்றங்களை அடைய எடுக்கப்படும் முயற்சி. அரசுச் செயல்பாட்டில் தென்படும் ஊழல், பெண்ணுரிமைக்கான கோரிக்கைகள், மனித உரிமைப் போராட்டங்கள், கல்வி மற்றும் சிறைச்சாலைச் சீர்திருத்தம், மது ஒழிப்பு, வீடற்றவர்களுக்கான உரிமைகள், வாக்குரிமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றச் செய்யப்படும் முயற்சிகள் சமூக மாற்றம் என்ற பெயராலே குறிக்கப்படுகிறது.
English
Activity designed to rearrange social institutions or the way they are managed to achieve greater social justice or other desired change. The term is most often applied to efforts to eliminate corruption in government or structural inequities such as institutional racism.