social rehabilitation

சமூக மறுவாழ்வு, சமூகப் புனர்வாழ்வு, சமூகப் புனருத்ரானம்

தமிழ் விளக்கம்

பரிச்சயமில்லாத சமூகத்திற்குள்ளோ, கலாச்சாரச் சூழ்நிலைக்கோ ஒருவரின் நுழைவை எளிதாக்க முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள். இது ஒருவகையில் மீள் சமூகமயமாக்கல் போன்றதே. பேரிடறினாலோ அல்லது வேறு இடர்ப்பாடுகளாலோ தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்தவர்களுக்கு, மீண்டும் இயல்பாக வாழக் கொடுக்கப்படும் உதவிகள் மற்றும் பயிற்சிகள் சமூக மறுவாழ்வில் அடங்கும். நீண்ட காலம் சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகும் ஒருவரை, அவர் சிறையிலிருந்த காலத்தில் அவர் கற்றுக்கொண்ட வாழ்க்கை முறைகளிருந்து மாறவும், மாறிவிட்ட சமூகச் சூழ்நிலைக்கு இணக்கமாக நடந்து கொள்ளவும் கொடுக்கப்படும் பயிற்சிகள். 1. மன நோய் மற்றும் மனவளர்சிக் குறைபாட்டாலோ பாதிக்கப்பட்டவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரச் செய்யப்படும் முயற்சிகள் 2. உடல் குறைபாடுள்ளவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களின் மாற்றுத் திறனை வளர்த்தெடுத்து அவர்களின் சமூகச் சார்பான செயல்பாடுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் 3. குற்றவாளிகள் மற்றும் விடுதலைக் கைதிகள் மற்றும் நன்னடத்தைப் பிணையிலுள்ளவர்கள் புது வாழ்வு தொடங்க உதவுவது போன்ற முயற்சிகள் சமூக மறுவாழ்வு முயற்சிகளாகும்.

English

Programs and activities that facilitate an individual's entry into a relatively unfamiliar society or cultural system. For example, former prison inmates are sometimes reacquainted with the norms and circumstances of society after long periods of incarceration. See also deinstitutionalization.