Social Security Number
சமூகப் பாதுகாப்பு எண்
தமிழ் விளக்கம்
சமூகக் காப்பீடுப் பயன்களைப் பெற அமெரிக்காவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுக்கப்படுகின்ற ஒன்பது இலக்கங்கள் கொண்ட அடையாள அட்டை. இது எல்லோருக்கும் வழங்கப்படுவதால் இதுவே, வருமான வரி, பல்வேறு உரிம அட்டைகள், பாஸ்போர்ட் போன்றவற்றிற்கும் அடிப்படை அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. தங்களைச் சார்ந்துள்ள குழந்தைகளுக்கு வருமான வரிச் சலுகை பெற வருமான வரிச் சட்டம் வழி வகுப்பதால், குழந்தைகளுக்கும் இந்த அடையாள எண் கொடுக்கப்படுகிறது. இது தவிர அமெரிக்காவில் பணிபுரியும் அயல்நாட்டினரும் உள்நாட்டு வருவாய்க் கணக்கிற்கு வருமானத் தகவல் கொடுக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கும் இந்த எண் கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலும் பலவிதமான அடையாள அட்டைகள், வருமான வரிக் கணக்கெண், வாக்காளர் அடையாள அட்டை, ஊனமுற்றோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, பிஎஃப் அடையாள அட்டை என்று பல அடையாள அட்டைகள் இருந்தாலும், தற்போது அடிப்படை அடையாள அட்டையாக ஆதார் அடையாள அட்டை கருதப்படுகிறது.
English
The nine-digit number given to almost all people in the United States to identify them for future social insurance benefits. Because of its near universality, the number is being used as an identifier for other official documents, including taxes, licenses, passport applications, and other records. As of 1993 all children who are claimed as dependents on Internal Revenue Service (IRS) tax returns must have their own number. Certain working and nonworking aliens who need to report income to the IRS must also have these numbers.