social services
சமூக சேவைகள்
தமிழ் விளக்கம்
மக்களுடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும், மக்கள் தன்னிறைவோடு வாழ உதவவும், ஆசிரிதத் (சார்ந்திருத்தலை) தன்மையைத் தடுக்கவும், குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும், தனி நபர்கள், குடும்பங்கள், குழுக்கள் மற்றும் சமுதாயங்கள் சமூகத்தில் வெற்றிகரமாகச் செயல்படுமளவிற்கு அவர்களின் நிலையை மீட்டெடுக்கவும் சமூகப்பணியாளர்களாலும், பிறராலும் செய்யப்படும் செயல்கள் சமூக சேவை எனப்படுகிறது. மக்கள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டித் தருவதும், தங்களுடைய குழந்தைகளையும் தங்களைச் சார்ந்திருப்பவர்களையும் கவனித்துக் கொள்ளும்படியான திறனுடையவர்களா என்பதை மதிப்பிட்டு அதற்கேற்ப உதவிகள் வழங்குவதும், ஆறுதல் சொல்வதும், உளப்பிணி சிகிச்சை அளிப்பதும், உதவிக்காக வழிகாட்டிப் பரிந்துரை செய்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்காக பரிந்து பேசுவதும், அவர்களுக்காக வாதாடுவதும், கஷ்டப்படும் தனி நபர்களுக்கு சமூக நிறுவனங்கள் செய்யவேண்டிய பொறுப்புகளை எடுத்துச் சொல்வதும், மருத்துவ வசதிகளைப் பெற உதவுவதும் உதவி தேவைப்படுபவர்களையும் உதவி கிடைக்குமிடங்களையும் இணைத்து வைப்பது போன்ற குறிப்பிட்ட செயல்களும் சமூக சேவையில் அடங்கும்.
English
The activities of social workers and others in promoting the health and well-being of people and in helping people become more self-sufficient; preventing dependency; strengthening family relationships; and restoring individuals, families, groups, or communities to successful social functioning. Specific kinds of social services include helping people obtain adequate financial resources for their needs, evaluating the capabilities of people to care for children or other dependents, counseling and psychotherapy, referral and channeling, mediation, advocating for social causes, informing organizations of their obligations to individuals, facilitating health care provisions, and linking clients to resources.