social services employee unions

சமூக சேவைப் பணியாளர் / ஊழியர் சங்கங்கள்

தமிழ் விளக்கம்

அரசின் சமூகநலத் துறையிலும், அரசு மற்றும் தனியார் சமூக சேவை நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலார்களுக்கான தொழிற்சங்கம். இவர்கள் தங்களின் உரிமைகளுக்காகவும், தங்களின் பணிச்சூழல் மேம்பாடடையவும், நலத்திட்டப் பயனாளிகளின் உரிமைகளுக்காகவும் போராடுபவர்கள். சேவைப்பணியாளர்கள் பெரும்பாலோர் மாநில, உள்ளாட்சி அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பிலும் (American Federation of State, County, and Municipal Employees (AFSCME), சேவைத் தொழிலாளர்களுக்கான சர்வதேசத் தொழிற்சங்கதிதிலும் (Service Employees International Union (SEIU) உறுப்பினர்களாயிருக்கின்றார்கள். இந்த இரண்டும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான அமெரிக்க சம்மேளனத்துடன் (American Federation of Labor–Congress of Industrial Organizations (AFL–CIO) இணைந்துள்ளது. இது தவிர பெரு நகரங்களான நியூயார்க் மற்றும் சிகாகோவில் பணியாற்றும் சேவைத் தொழிலாளர்கள், தங்களுக்கென தனியாகச் சங்கம் வைத்துச் செயல்படுகிறார்கள்.
பார்க்க: American Federation of State, County, and Municipal Employees (AFSCME)- மாநில, உள்ளாட்சி அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பு - இது வாஷிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு, 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, அமெரிக்க மைய அரசுப் பணியல்லாத, மாநிலம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் சமூகப்பணியாளர்கள். இவர்கள் மாநில மற்றும் உள்ளாட்சி மன்றங்களால் செயல்படுத்தப்படும் சமூகநலத் திட்டங்களில் பணியாற்றுபவர்கள். இவர்கள் தவிர காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொது நிர்வாகப்பணியாளர்களும் இத்தொழிற்சங்கத்தில் உறுப்பினர்கள்.
American Federation of Labor–Congress of Industrial Organizations (AFL–CIO), தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான அமெரிக்கா சம்மேளனம் - அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டமைப்பு. 1886 இல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனமும், 1935 இல் ஆரம்பிக்கப்பட தொழிற்சாலைகளுக்கான காங்கிரசும் இணைந்து 1955 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான அமெரிக்கா சம்மேளனம் என்ற ஒற்றை அமைப்பு உருவானது. இப்போது இந்த அமைப்பில் நூறுக்கு மேலான தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. அமெரிக்க அரசு ஊழியர் சங்கமும், மாநில, உள்ளாட்சி அமைப்பு ஊழியர் சங்கங்களும் இதனுடன் இணைந்துள்ளன.
Service Employees International Union (SEIU) - சேவைத் தொழிலாளர்களுக்கான சர்வதேச தொழிற்சங்கம் 19 இலட்சம் உறுப்பினர்களைக்கொண்ட தொழிற்சங்க அமைப்பு. இது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான அமெரிக்க சம்மேளனத்துடன் (American Federation of Labor–Congress of Industrial Organizations (AFL–CIO) இணைந்தது. மருத்துவம், சமூகநலம் மற்றும் குற்றேவல் துறைகளில் பணிபுரியும் 100 வகையான தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, அமெரிக்கா, கனடா மற்றும் புவேர்ட்டோ ரிகோவில் 150 உள்ளூர் கிளைகளுக்கும் மேலாகக் கொண்டு செயல்படும் வலிமையான தொழிற்சங்க அமைப்பு.

English

Labor organizations whose members are employed in public welfare offices and other public and private social agencies to maintain workers' rights and enhance working conditions as well as to advocate for clients. The two largest of these unions are American Federation of State, County, and Municipal Employees (AFSCME) and Service Employees International Union (SEIU), both of which are affiliated with the American Federation of Labor-Congress of Industrial Organizations (AFL-CIO) and have many social workers among their memberships. Many independent social work unions also exist in larger cities, including New York's Social Services Employee Union and Chicago's Independent Union of Public Aid Employees.