social services vouchers

சமூக சேவைகளுக்கான சான்றாவனம், சமூக சேவைகளுக்கான உறுதிச் சீட்டு, சமூக சேவைகளுக்கான கச்சாத்து

தமிழ் விளக்கம்

சமூக நலத்துறை / மானுட சேவைத் துறையால் தகுதியடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, சேவை வழங்கும் நிறுவனங்களோ அல்லது தனிநபர்களோ குறிப்பிட்ட தர உத்தரவாதத்தின் அடிப்படையில் சேவை வழங்கினால், அச்சேவைக்கான கட்டணத்தை, சமூக நலத்துறையில் / மானுட சேவைத் துறையில் பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கான சான்றாவனம். சேவைக்கட்டணங்கள் சேவை வழங்குவோர் மற்றும் சமூக நலத்துறையால் முன்னரே தீர்மானிக்கப்படுவதால், பயனாளிகள் தங்களுக்கு விருப்பமான சேவை வழங்குனர்களைத் தெரிவு செய்துகொண்டு சிறந்த சேவையைப் பெறமுடியும். இந்த முறை சேவை வழங்குனர்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை வளர்ப்பதால், திறமையான சேவை பயனாளிகளுக்குக் கிடைக்கின்றது.

English

A system in which clients eligible for public social services are given authorizations for service providers to remit bills to the welfare or human services department for the care they provided to the client. Providers are reimbursed if they meet specified standards. The rates are negotiated in advance between the service providers and the department. This system is thought to give clients greater choice, cut costs, foster innovative service delivery procedures, and provide more efficient delivery of welfare services.