social skill

சமூகத் திறன்

தமிழ் விளக்கம்

குறிப்பிட்ட சமூக நோக்கங்களை அடைய மற்றவர்களுடன் உறவாடவும், இணைந்து பணியாற்றவும் தெளிவாகப் பேசுதல், எழுதுதல், நேரம் மற்றும் நிதியாதரங்களைத் திறனுடன் நிர்வகித்தல், மற்றவர்களிடம் பரிவாக நடந்து கொள்ளல், மற்றவர்களை வசீகரித்தல் அல்லது வசப்படுத்தல் போன்ற திறன்கள் சமூகத் திறன்கள் எனப்படும்.
பார்க்க: Skill - சாமர்த்தியம், சாதுர்யம், திறன், புலமை - 1. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஆற்றலைச் செலவழித்து, முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறிக்கோளை அல்லது செயலை செய்து முடிக்குமளவு வளர்த்துக்கொண்ட ஆற்றலைத் திறன் எனலாம். திறன் என்பது பயிற்சியின் மூலமாகப் பெறுவது. ஆற்றல் என்பது உள்ளார்ந்தது. 2. ஒருவர் தன்னுடைய உடல்வலிமை, அறிவு, ஆளுமை மற்றும் இதர வாய்ப்புகளை உபயோகப்படுத்தி பயனடையப் பெற்றிருக்கும் தேர்ச்சியை அல்லது சாதுர்யத்தைத் திறன் என்றும் சொல்லலாம். 3. சிக்கலான செயல்களைச் செய்துமுடிக்கத் தேவையான சிந்தனைத்திறன் (cognitive skills), உபகரணங்களைக் கையாளும் திறன் (technical skills), மனிதர்களோடு பழகும் திறன் (interpersonal skills) போன்றவற்றைத் திட்டமிட்டு, முறையாகத் தொடர்ச்சியாகப் பயிற்சியின் மூலம் பெற்ற ஆற்றலை திறன் எனலாம். திறன்களை பொதுத் திறன்கள் (domain-general), செயல்பாட்டுத் திறன்கள் (domain-specific) என்று வகைப்படுத்தலாம். நேர மேலாண்மை, குழுவில் பணிசெய்வது, வழிநடத்தல், ஊக்கமுடமை போன்ற திறன்கள் பொதுத்திறன் என்றும், ஒரு குறிப்பிட்ட செயலை நேர்த்தியாகச் செய்துமுடிக்கத் தேவையான திறன்களைச் செயல்பாட்டுத் திறன் எனவும் கூறலாம். ஏதுவான சூழ்நிலையும், பொருத்தமான தூண்டலும் அமையும் பட்சத்தில் திறன்கள் வெளிப்படும் என்பது பொதுவிதி. மாறிவரும் சமூக, பொருளாதார, தொழில்நுட்பச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்குப் பரவலான திறன்கள் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டு - உடல் திறன்கள் (ஓடுதல், நடத்தல், பாய்தல், தாண்டுதல்) - கல்வித் திறன்கள் (கற்றல், வாசித்தல், எழுதுதல், கேட்டல், பேசுதல், கணித்தல், சிந்தித்தல், பகுத்தறிவு) - தொடர்பாடல் திறன்கள் (உரையாடல், நிகழ்த்துதல், ஆவணப்படுத்தல்) - கலைத்திறன்கள் (பாடுதல், ஆடுதல், நடித்தல், நகைச்சுவை, இசை, ஓவியம் வரைதல்) - ஆய்வுத் திறன்கள் (அகமாய்தல், வினவுதல் / கேள்வி கேட்டல்) போன்றவை சமூகத்திரங்களாகும்.

English

The ability to relate to and work with others in achieving specific social goals. Examples include speaking understandably, writing clearly, managing time and finances adequately, and empathizing with and influencing people.