social status

சமுதாயத் தகுநிலை, சமூக அந்தஸ்து

தமிழ் விளக்கம்

சமூக அந்தஸ்து அல்லது சமூகத் தகுநிலை என்பது ஒரு சமுதாயப் படிநிலையில் மற்றவர்களை ஒப்பிடும்போது ஒருவருக்கு இருக்கும் மரியாதை, அதனடிப்படையான வாழ்வு முறை, உரிமைகள் மற்றும் கடமைகளைக் குறிக்கும். சமூகத் தகுநிலை ஒருவரின் பிறப்பால் வரும் (பாலினம், வயது, இனம், குடும்ப மரபு) உற்ற தகுநிலை (ascribed status), ஒருவர் தன் திறமையாலும் ஆளுமையாலும் (கல்வி, பதவி, சாதனைகள்) ஈட்டிய (எய்திய) தகுநிலை (achieved status) என்று இருவகைப்படும். சமூகத் தகுநிலையே, ஒருவர் மற்றவர்களுடன் எப்படித் தொடர்பு கொள்கிறார், மற்றவர்கள் இவருடன் எப்படித் தொடர்பு கொள்ளவேண்டும் என்பதையும், பரஸ்பர சமூக இடைவெளியையும் (social intimacy & social distance) நெருக்கத்தையும் தீர்மானிக்கின்றது.

English

See status.