social support

சமூக ஆதரவு / ஆதாரம், சமூக அரவணைப்பு, பக்கத் துணை, தாங்குதல்

தமிழ் விளக்கம்

மனிதர்களின் சமூக வாழ்விற்கான வருமானப் பாதுகாப்பு, கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எடுக்கப்படும் இயல்பான / தன்னிச்சையான மற்றும் திட்டமிட்ட / முறைப்படுத்தப்பட்ட செயல்பாடுகள். தனி மனிதர்கள், குழுக்கள் மற்றும் நிறுவன வலைப்பின்னல்கள் மூலம், இந்தச் செயல்பாடுகள் தன்னம்பிக்கை அளித்தல், ஒன்றை அணுகிப்பெற உதவுதல், தன்னுணர்வேற்றல் (empathy), முன்மாதிரியாக நடந்து கொள்ளல், சமூக அடையாளம் வழங்குதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுகிறது.

English

Formal and informal activities and relationships that provide for the needs of humans in their efforts to live in society. These needs include education; income security; health care; and especially a network of other individuals and groups who offer encouragement, access, empathy, role models, and social identity.