social utility

சமூகப் பயனுடமை, பொதுமக்கள் பயன்பாட்டுச் சேவை

தமிழ் விளக்கம்

பொதுப் பயன்பாட்டுச் சேவைகளான போக்குவரத்து வசதி, கல்வி வசதி, அஞ்சல் வசதி, குடிநீர் மற்றும் வடிகால் வசதி, நூலக வசதி, பொழுபோக்கு வசதி போன்ற வசதிகளைப் போன்று சமூக சேவையும் பொதுமக்கள் தங்களின் அன்றாட வாழ்வுத் தேவைகளுக்காக இயல்பாக பயன்படுத்தும் பயன்நுகர் சேவைகளைப் போன்றதே என்ற கருத்தாக்கம். சமூக சேவையைப் பயன்படுத்துபவர்களை இயலாதவர்கள் என்றோ, பொது நிலையிலிருந்து விலகியவர் என்றோ, பழக்கம் மற்றும் ஆளுமைக் கோளாறு உள்ளவர் என்றோ கருதலாகாது என்றும், அவர்களை நோயாளிகளாகவோ அல்லது வாடிக்கையாளர்களாகவோ பார்க்காமல் மற்ற பொதுக்கட்டமைப்பை உபயோகப்படுத்துகின்ற குடிமக்களாகவோ அல்லது பொது நுகர்வோர்களாகவோகத்தான் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிற கண்ணோட்டம்.

English

A way of looking at social services as part of the normal system of needs most people may use at some time in their lives. This construct sees social services as inherently the same as any other public utility and part of the infrastructure, including the transportation system, the educational system, the postal system, the water and sewer systems, libraries, and museums. People who use social utilities, and thus rely on others in society, are not considered deviant or helpless. In the social utility concept, the user of social services is seen as a citizen, not a patient or client.