social value

சமூக மதிப்பு, சமூகப் பெறுமதி / பெறுமானம், சமூக முக்கியத்துவம், சமூகப் பயன் வள மதிப்பு

தமிழ் விளக்கம்

ஒரு சேவை அல்லது பொருளின் ஒப்பீட்டு அளவிலான சமூகப் பயன்பாடு. இது ஒரு பொருளின் பணமதிப்பை விட, அந்தப் பொருளால் சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மைகளைக் கணக்கிடுவது. எடுத்துக்காட்டாக ஒரு மகிழுந்தும் (car), பேருந்தும் சம விலையுள்ளதாக இருந்தாலும், பேருந்தின் சமூகப் பயன்பாடு ஒரு மகிழுந்தின் சமூகப் பயன்பாட்டை விட அதிகம். ஒரு மதுக்கூடம் ஏற்படுத்துவதற்கும், ஒரு நூலகம் ஏற்படுத்துவதற்கும் ஒரே அளவிலான கட்டிட வசதியும், முதலீடும் தேவைப்பட்டாலும், மதுக்கூடத்தின் சமூக முக்கியத்துவத்தை விட நூலகத்தின் சமூக முக்கியத்துவம் / பயன்பாடு பெரிது.

English

The relative worth to society of a service or commodity. The term is used to differentiate between the cash or dollar value of some items that are measured objectively and the value of other items that enhance the social good but cannot be measured in dollars. For example, a library building and its contents may have the same dollar value as a liquor store and its contents, but their social values differ.