social wage
சமூக ஊதியம், சமூக வருமானம்
தமிழ் விளக்கம்
மக்களுக்குக் கிடைக்கும் பொதுவசதிகளால், எடுத்துக்காட்டாக நல்ல சாலை, போக்குவரத்து வசதிகள், தெருவிளக்கு, பாதுகாப்பான குடிநீர் போன்ற வசதிகளால், அவர்களுடைய சிரமம் குறைந்து, அதனால் செலவினங்கள் குறையும். எந்த வசதியால் மக்களின் இயல்பான வாழ்க்கைச் செலவுகள் குறைகின்றதோ, அதை அவர்களின் வருமானமாகக் கொள்ளலாம். இது சமூகத்தின் மூலமாகக் கிடைக்கும் வருமானம்.
பார்க்க: New Property - புதிய சொத்து - புதிய சொத்து என்பது ஒருவர் புதிதாக வாங்கிய உடமைகளைக் குறிக்குமென்றாலும், சமூக நலக் கண்ணோட்டத்தில் அது சமூக வசதிகளைக் குறிக்கும். அது ஒரு குடியிருப்புப் பகுதியில் பொதுவாகக் கிடைக்கும் சில சேவைகள், சில ஆதாரங்கள் மற்றும் உத்தரவாதமான உடமைகளைக் குறிக்கும். சமூகத் திட்டமிடுபவர்கள் மற்றும் பொருளியலாளர்கள் இதை ஓரிடத்திலிருப்பதால், ஓரிடத்தில் வாழ்வதால் அடையத்தகுந்த சமூக வருமானம் (social wage) அல்லது புதிய அனுகூலம் (new income) என்கின்றனர். இந்த அனுகூலத்தைப்பெற உழைப்பு தேவைப்படாவிட்டாலும் அது அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிரணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

English
See new property.