social welfare

சமூக நலம்

தமிழ் விளக்கம்

சமூக நலம் என்பது உள்விரிவாக்கம் கொண்ட பல செயல்பாடுகளையும், அணுகுமுறைகளையும் உள்ளடக்கிய சொல்லாடல். 1. சமூக நலமென்பது, மனிதர்களுடைய சமூகச் செயல்பாட்டைத் (மனிதர்களின் வகிபாகத்தின் பொருட்டு செய்யவேண்டிய கடமைகள் social roles & relationship) தொடர்ந்து பேணவும் அதைச் செழுமையாக்கவும் மேற்கொள்கின்ற தனிமனித மற்றும் கூட்டுச் செயல்பாடுகளைக் குறிக்கும். 2. தனிமனிதர்களும், அரசு உள்ளடக்கிய பிற நிறுவனங்களும் பொருள்ரீதியான (வணிக நோக்கோடு இல்லாமல்) செலவினங்களை, பிரதிபலன்களை எதிர்பார்க்காமல், மானுடத் துன்பத்தையும், வறுமையை ஒழிப்பதற்கும், மானுடத் துன்பங்களுக்கான காரணங்களைக் குறைக்கவும் எடுக்கின்ற முயற்சிகள். 3. சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட (தவிர்க்கப்பட வேண்டுமென்ற) சமூகப் பிரச்சனைகளைத் தடுக்கவும், ஒழிக்கவும், தீர்வுகாணவும் அல்லது தனிமனிதர்கள், குழுக்கள் மற்றும் சமுதாயங்களின் நலனை மேம்படுத்தவும், அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் முறையாக மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் சமூக நலன் என்று பொருள் கொள்ளலாம். 4. சந்தை கணக்கீடுகளின்படியோ (பணம் கொடுத்து பொருள் பெறும் பண்டமாற்று முறை) அல்லது குடும்பக் கணக்கீடுகளின் படியோ (இரத்தத் தொடர்பினால் வருவது) இல்லாமல், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரச்சனைகளைக் குறைத்து, வராமல் தடுத்து, ஏற்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, தனிமனிதர்கள், குழுக்கள், குடும்பங்கள் மற்றும் சமுதாயங்கள் நலமுடன் வாழும் பொருட்டு, வரையறுக்கப்பட்ட குறைந்த பட்ச சேவைகள், பொருளுதவி மற்றும் சமூக நுகர்வுகளை தனிமனிதர்கள், குடும்பங்கள் மற்றும் குழுக்களுக்கு வழங்க, தன்னார்வத்துடனோ அல்லது அரசின் மூலமாகவோ, செயல்படுத்தப்படும் நிறுவனங்கள், சட்டங்கள் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளைச் சமூக நலம் எனலாம். 5. சமூகம் இயல்பாகப் பேணப்படுவதற்கு, அதன் மக்களுக்குத் தேவையான சமூகப்பொருளாதார, கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளை வழங்க, ஒரு சமூகமோ தேசமோ ஏற்பாடு செய்யும் பயன்கள், சேவைகள் மற்றும் திட்டங்களைச் சமூக நலம் எனலாம். 6. சமூக நலன் என்பது ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வைக் குறிக்கும் சொல்லாடல்.

English

1. A nation's system of programs, benefits, and services that help people meet those social, economic, educational, and health needs that are fundamental to the maintenance of society. 2. The state of collective well-being of a community or society.