Social Welfare Administraion in India - Milestones

இந்தியாவில் சமூக நல வரலாற்றுச் சுவடுகள் /மைல்கற்கள்

தமிழ் விளக்கம்

இந்தியாவில் சமூக நலம் முதன்மையாக குடும்ப அமைப்புகளாலும், சமுதாய அமைப்புகளாலும் பேணப்பட்டு வந்திருந்த நிலை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காலத்தில் அரசு சார்ந்த சமூக நலத் திட்டங்கள் அறிமுகமாகின. இந்திய சுதந்திரத்திற்குப் பின், சமூக நலத்தின் பல கூறுகள் அரசுப் பொறுப்பாயின. இந்தியாவில் சமூக நலம் மாநில (state list) மற்றும் மைய அரசு (central list) மற்றும் பொதுப்பட்டியல் என்று மூன்று பட்டியல்களை உள்ளடக்கியது. சில வரலாற்றுக் குறிப்புகள், சமூக நல நிர்வாகம் இந்திய நடுவனரசில் பரிணாம வளர்ச்சி பெற்றதை புரிந்து கொள்ள உதவும்.
1956 – இந்திய சமூகப்பணி சம்மேளனம் (தற்போது சமூக நல சம்மேளனம்) சமூகநலத்திற்காக தனியாக நடுவனரசில் அமைச்சகம் தொடங்கப்படவேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தியது.
1958 – சமூக நலம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான ஆய்வுக்குழு, பல்வேறு அமைச்சகங்களால் கையாளப்பட்டு வரும் சமூக நலப் பொறுப்புகளை ஒருணுங்கிணைக்க தனியாக சமூக நலத்துறை உருவாக்கப்படவேண்டுமென்று பரிந்துரைத்தது.
1964 – சமூகப் பாதுகாப்புத் துறை உருவானது.
1966 – சமூகப் பாதுகாப்புத் துறை சமூக நலத்துறை என்று பெயர் மாற்றம் பெற்றது.
1967 – அறக்கட்டளைகளை நிர்வகித்து வந்த சட்ட அமைச்சகப் பொறுப்பிலிருந்து விடுவித்தும், சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, பிராந்தியத் திட்டமிடல் பொறுப்புகளை கவனித்து வந்த அமைச்சகத்திலிருந்து குழந்தைகள் நலப் பொறுப்புகளை விடுவித்தும், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை கவனித்து வந்த பல்வேறு பொறுப்புகளை ஒருங்கிணைத்தும் புதிதாக தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் சமூக நல அமைச்சு உருவாக்கப்படவேண்டுமென்று நிர்வாகச் சீர்திருத்தத்திற்கான ஆணைக்குழு பரிந்துரைத்தது.
1979 – சமூக நலத்துறை முதன் முறையாக சமூக நல அமைச்சகமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது.
1985 – 1986 – சமூக நல அமைச்சகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மற்றும் சமூகநலத்துறை என்று இரு துறைகளாகப் பிரிக்கப்பட்டது. அதே நேரத்தில் அதுகாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சகப் பொறுப்பிலிருந்த ஆதி திராவிடர், ஆதிவாசிகள் மற்றும் பின்தங்கிய சமூகங்களின் மேம்பாடுப் பொறுப்பும், சட்ட அமைச்சகப் பொறுப்பிலிருந்த வக்பு வாரியம் விடுவிக்கப்பட்டு, சமூக நலத்துறை பொருப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.
1998 – சமூக நல அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் என்று பெயர் மாற்றம் பெற்றது
1999 – ஆதிவாசிகள் மேம்பாட்டு வாரியம் சமூக நல அமைச்சிலிருந்து பிரிக்கப்பட்டு தனி அமைச்சக அந்தஸ்து பெற்றது
2007 - சிறுபான்மையினர் நலம் மற்றும் வக்பு வாரியம் சமூக நல அமைச்சிலிருந்து பிரிக்கப்பட்டு தனி அமைச்சக அந்தஸ்து பெற்றது
குழந்தைகள் நலத்துறை சமூக நல அமைச்சகத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பார்க்க: administrative responsibilities of Ministry of Social Justice and Empowerment சமூக நீதி மற்றும் அதிகாரமாளித்தல் அமைச்சகத்தின் பொறுப்புகள்

English

The following events are important in the evolution of the Ministry of Social Welfare at the
Centre.
1947 – India attains independence
1956 - Indian Conference of Social Work (now Indian Council of Social Welfare) Suggested to create a Central Ministry of Social Welfare.
1958 - Study Team on Social Welfare and Welfare of Backward Classes Suggested to create
Department of Social Welfare combining the subjects handled by different ministries.
1964 - Creation of Social Security Dept Death of Nehru
1966 - Department of Social Security was redesignated as Department of Social Welfare
1967 - Administrative Reforms Commission suggested to group various subjects with the
Department of Labor and Employment to constitute a Ministry of Labor, Employment and
Social Welfare -Transfer of charitable and religious institutions from the Ministry of Law and also transfer transfer child welfare from Ministry of Health, Family Planning and Regional Planning.
to theproposed ministry
1979 - Department of Social Welfare was elevated to the status of an independent Ministry.
1985-86 - Ministry of Social Welfare was bifurcated into the Department of Women
and Child Development and the Department of Welfare. Simultaneously, the Scheduled
Castes Development Division, Tribal Development Division and the Minorities and Backward
Classes Welfare Division were moved from the Ministry of Home Affairs and also the Wakf
Division from the Ministry of Law to form the then Ministry of Welfare.
1998 - The name of the Ministry of Welfare was changed to the Ministry of Social Justice &
Empowerment.
1999 - Tribal Development Division had moved out to form a separate Ministry of Tribal Affairs.
2007, the Minorities Division along with Wakf Unit have been moved out of the
Ministry and formed as a separate Ministry
The Child Development Division has gone to the Ministry of Women & Child Development