social work
சமூகப்பணி
தமிழ் விளக்கம்
1. மனிதர்கள் தங்களின் பிரச்சனைகளைத் தாங்களே சமாளிக்கவும், அதைத் தீர்த்துக்கொள்ளும் திறனை வளர்க்கவும் தேவையான உதவியாதரங்களை வழங்குதலும், மனிதர்களுக்கிடையேயும் அவர்களின் சுற்றுப்புறத்தோடும் தொடர்பாடத் துணை தந்து ஊக்குவித்தலும், நிறுவனங்களை மக்களுக்கும், சமூகத்திற்கும் பொறுப்புடையதாக்கலும், மக்களுக்கு அனுசரணையான அரசுக் கொள்கைகளை உருவாக்கி செயல்படுதலும் சமூகப்பணியின் முக்கிய செயல்பாடுகள். இதற்காகத் தனிமனிதர்கள், குடும்பங்கள், சமுதாயங்களுடன் நேரடியாகப் பணியாற்றியோ, அல்லது அமைப்பு ரீதியான ஒழுங்கு முறைகளையும் கொள்கைகளையும் வடிவமைக்க உதவியோ அல்லது பெரிய சமூக நிறுவனங்களில் நிர்வாகிகளாகவோ, திட்டமிடுபவர்களாகவோ பணியிலமர்ந்து இந்த நோக்கங்களை நிறைவேற்ற சமூகப்பணியாளர் முயல்வர். 2. மனிதர்களின் சமூக உளவியல் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, சமூக மாற்றத்திற்கு உதவுவதன் மூலம், மானுட நலனைச் செழுமையாக்க உதவும் செயல்முறை சார்ந்த அறிவிலை சமூகப்பணி எனலாம். 3. தனிமனிதர்கள், குழுக்கள் மற்றும் சமுதாயங்களுக்கு உதவுவதன் மூலம், அவர்களின் சமூகச் செயல்பாட்டுத் திறனை மீட்டெடுக்கவும், செழுமையாக்கவுமான சமூகச் சூழ்ல்நிலையை உருவாக்குவதற்கான தொழிலமைப்பாக்கச் செயல்பாடே சமூகப்பணி எனப்படுகிறது. சமூகப்பணியின் தொழிலமைப்புக் கோட்பாடுகளின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு, சமூகப்பணி உத்திகளைக் கையாண்டு, மக்களுக்குப் பொருள், பண வடிவிலான புறவய உதவிகள் கிடைக்க வழிசெய்தும், தனிமனிதர்கள், குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு உளவளத் துணையும், உளப்பிணி சிகிச்சை போன்ற அகவய உதவிகள் தந்துதவியும், சமுதாயங்களுக்கும் குழுக்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஆரோக்கிய வசதிகள் தந்துதவியும் அல்லது அதை மேம்படுத்திக்கொள்ள வழிகாட்டியும், மக்களுடைய வாழ்வோடு சம்பந்தப்பட்ட சட்டமியற்றல் மற்றும் கொள்கை வடிவமைப்புகளில் பங்கேற்க உதவியும், இதுமாதிரி ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நோக்கங்களை அடையவோ உதவுவது சமூகப்பணியாகும். இந்தக் குறிக்கோளை அடைய மனித வளர்ச்சி மற்றும் நடத்தையைப் பற்றிய அறிவும், சமூகப் பொருளாதார கலாச்சார நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று எப்படி ஊடாடுகின்றன என்பதைப் பற்றிய புரிதலும் தேவைப்படுகின்றது. 4. தனிமனிதர்கள், குடும்பங்கள், குழுக்கள் மற்றும் சமுதாயங்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு நலத்தில் அக்கறை கொண்டு உதவுவது சமூகப்பணியின் தொழிலமைப்பு நோக்கமாகும். அது மனிதர்களின் உள்ளாற்றலையும், திறன்களையும் வளர்த்து, தங்களிடமும் தாங்கள் வாழும் சமுதாயத்தினிடமும் உள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தி பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவதை நோக்கமாகக் கொண்டது. சமூகப்பணி தனிமனிதர்கள் பிரச்சனைகள் மீது கொண்டிருக்கும் அக்கறையைப் போன்றே, சமூகத்தின் பொதுவான பிரச்சனைகளான வறுமை, வேலையின்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள், குடும்ப வன்முறை, மனித உரிமை மீறல், போதைப்பொருள் உபயோகம், புலம் பெயர்ந்தோர் உரிமைகள் போன்றவற்றிலும் அக்கறை கொண்டு செயல்படுகிறது. 5. மனித உரிமை மற்றும் சமூகநீதி இரண்டும் சமூகப்பணியின் தத்துவார்த்த அடிப்படைகளாகும். சமூகப்பணியின் தனித்துவமே அது குறிப்பிட்ட நெறிகளையும், அறிவுத்தளத்தையும், திறன்களையும் கொண்ட கலவையாகி, மானுட உறவுகளையே நிவாரண, சிகிச்சை முறைகளாக்கி, வாடிக்கையாளரையே பிரச்சனையிலிருந்து விடுபட முயற்சி செய்ய வைக்கின்றது. சமூக நெருக்கடிகளும், பாதுகாப்பின்மையையும் உருவாகக் காரணமான சமூகப்பொருளாதாரச் சூழ்நிலையில் சமூகப்பணியாளரின் பங்கும் பணியும் முக்கியத்துவம் பெறுகின்றது.
English
1. The applied science of helping people achieve an effective level of psychosocial functioning and effecting societal changes to enhance the well-being of all people. 2. According to the National Association of Social Workers (NASW), "Social work is the professional activity of helping individuals, groups, or communities enhance or restore their capacity for social functioning and creating societal conditions favorable to this goal. Social work practice consists of the professional application of social work values, principles, and techniques to one or more of the following ends: helping people obtain tangible services; providing counseling and psychotherapy with individuals, families, and groups; helping communities or groups provide or improve social and health services; and participating in relevant legislative processes. The practice of social work requires knowledge of human development and behavior; of social, economic, and cultural institutions; and of the interaction of all these factors" (Standards for Social Service Manpower, Washington, DC: National Association of Social Workers, 1973, pp. 4-5).