Social Work Abstracts

சமூகப்பணி ஆய்வு / இலக்கியச் சுருக்கங்கள் / சாரம்சம், ஆதார இலக்கிய / ஆய்வுக் குறியீடு சேவை

தமிழ் விளக்கம்

ஒரு துறை சார்ந்து பலராலும் வெளியிடப்படும் ஆய்வுகளை, தலைப்பு வாரியாகப் பிரித்து, அதன் சாரம்ஸத்தை / சுருக்கத்தை வழங்கும் முறை. நூற்பட்டியல் (Bibliography), எடுத்தாளப்பட்ட ஆய்வுக் (மேற்கோள் காட்டப்பட்ட) குறியீடு (citation index), ஆய்வுத் தகவலறியும் வழிகாட்டிகள் (Guide to information sources), பொருள் அட்டவனைப்ப்படுத்தல் (Subject indexing) என்று ஆய்வாளர்களுக்கு உதவப் பலமுறைகள் கையாளப்படுகின்றன. தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம், 1965 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 500 க்கும் மேலான அமெரிக்க மற்றும் சர்வதேச பத்திரிகைககளில் சமூகப்பணி மற்றும் சமூக நலம் (சமூகப்பணி தத்துவ முறைகள், செயல் முறைகள், சமூக நிகழ்வுகள், சமூகப்பிரச்சனைகள், சமூகப்பணியாளர் பணியாற்றும் பல்வேறு தளங்கள்) தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளின் சுருக்கத்தை / சாரம்ஸத்தை வெளியிடுகிறது.

English

A quarterly publication and database established in 1965 by the National Association of Social Workers (NASW) to provide summaries of recently published articles from social work and related journals. Between 1977 and 1993 it was part of the publication Social Work Research & Abstracts.