Social Work Curriculum Study

சமூகப்பணி பாடத்திட்ட ஆய்வு

தமிழ் விளக்கம்

சமூகப்பணி கல்வியில் என்னென்னவெல்லாம் போதிக்கப்பட வேண்டுமென்று யோசனை சொல்வதற்காக, சமூகப்பணிக் கல்விக்கான குழு (Council on Social Work Education), வெர்னர் போம் தலைமையில் 1959 ஆம் ஆண்டு நியமித்த குழு. இந்தக்குழுவின் அறிக்கை சமூகப்பணிக் கல்வியில் ஒரு மைல்கல் என்றே கருதப்படுகிறது. 13 பாகங்களைக்கொண்ட இந்த அறிக்கையின் மூலமாக சமூகப்பணிக் கல்லூரிகளுக்கு அங்கீகாரமளிக்கும் வரையறைகளையும், சமூகப்பணிக் கல்லூரிகளில் எந்த மாதிரியான போதனா முறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பதையும் சமூகப்பணி கல்விக்குழு வரையறை செய்தது.
பார்க்க: ஹோலிஸ்-டெய்லர் அறிக்கை - சமூகப் பணிக்கல்வியின் நிலையையும் எதிர்காலத்தில் அது செல்லவேண்டிய திசைகளையும் ஆராய்ந்து, 1951 ஆம் ஆண்டு எர்ணஸ்ட் ஹோலிஸ் மற்றும் அலிஸ் டைலர் கொடுத்த முக்கியமான ஆய்வறிக்கை. இந்த அறிக்கை சமூகப்பணிக் கல்வி நிபுணத்துவம் கொண்ட பல்வேறு பாடப் பிரிவுகளாக விரிந்து, எந்தப் பிரச்சனைக்கும் தனித்தனியாக தீர்வு காண நினைக்கும் போக்கை கேள்விக்குறியாக்கி இருந்தது. இதற்கு மாறாக சமூகப்பணிக் கல்வியில் முழுமை நோக்குக் கண்ணோட்டம் வலியுறுத்தப்பட்டு, பொதுவான சமூகப் பிரச்சனைகளில் அக்கறைகொண்ட, சமூகச் செயல்பாட்டை முன்னிலைப்படுத்த வலியுறுத்தியது. அவர்களின் அறிக்கை சமூகப்பணிக் கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இப்போதிருக்கின்ற சமூகப்பணிக் கல்வியின் நோக்கங்களை தீர்மானிக்க உதவியது.

English

The landmark report published in 1959 by the Council on Social Work Education (CS WE), under the direction of Werner Boehm, which delineated the components of graduate-level social work education. The 13-volume study was used as a guide by CSWE in establishing criteria for accrediting schools of social work and by the schools as a means of developing effective educational programs. See also Hollis-Taylor Report.