social work knowledge
சமூகப்பணி அறிவுத்தளம்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியை அப்பியாசிக்கவும், அதில் தொழில்புரியவும் எந்தெந்த துறைசார்ந்த அறிவுப் பரிச்சயம் தேவை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சமூகப் பணியாளர் எடுத்துக்கொள்ளும் பொறுப்புகளுக்கேற்ப, சிலவற்றில் பாண்டித்யமும், சிலவற்றில் புரிதலும் தேவைப்படுகின்றன. சமூகப்பணியாளருக்கு தனிமனித உளவியல் மற்றும் தேவைகள், அதனடிப்படையில் சமூகத்தோடும், சுற்றுப்புறத்தோடும் கொண்டுள்ள ஒருங்கமைவு, அதனால் ஏற்படும் நிறைகுறைகள் பற்றி அறிவியல் பூர்வமான புரிதல் இருக்கவேண்டும். தனிமனிதர்கள், குழுக்கள் மற்றும் சமுதாயப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும், கையாளவும் உதவும் கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகள் பற்றிய புரிதல் இருக்கவேண்டும். ஒவ்வொரு சமுதாயத்திலிருக்கும் உதவியாதாரங்கள் மற்றும் சேவைகள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தும் சமூக நலச் சேவைகள், அதன் நோக்கங்கள், அதற்கான தகுதிகள் போன்றவற்றைத் தெரிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு சமுதாயத்திலும் பொதுநலம் எப்படிப் பேணப்பட்டு வளர்ந்து வந்துள்ளது என்ற வரலாற்றுப் புரிதல் சமூகப்பணியாளருக்குத் தேவை. சமூகப்பொருளாதார அரசியல் கோட்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவுடன், ஒவ்வொரு சமூகத்திலுமுள்ள இனம், மரபு சார்ந்த, கலாச்சார ரீதியான குழுக்களின் வாழ்க்கை முறைகள், விழுமியங்கள் மற்றும் அதனடிப்படையில் உருவாகும் சமகாலத் தாக்கங்கள் பற்றிய தெளிவு தேவை. சமூகப்பணி தொழிலமைப்பைச் சார்ந்த கோட்பாடுகள், செயல்முறைகள் மற்றும் சமூகத் திட்ட்மிடல் தொடர்பான விசயங்களில் எத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன, அந்த ஆய்வு முடிவுகளைத் தன்னுடைய செயல்முறைகளோடு ஒருங்கிணைத்துச் செயல்படும் ஆற்றல் தேவை. ஒரு காரியத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்ளத் தேவைப்படும் மேற்பார்வை முறைகளைப் பற்றிய பொதுவான தெளிவும், அதை சமூகப்பணிச் செயல்களில் எப்படிப் பொருத்திப்பார்ப்பது என்றறிய மேற்பார்வை பற்றிய கோட்பாடுகள் பற்றிய தெளிவான புரிதல் தேவை. பணியாளர்கள் மேலாண்மை பற்றிய கோட்பாட்டுப் புரிதல், சமூகவியல், உளவியல் தொடர்பான ஆய்வு முறைகள் அதன் உத்திகள் மற்றும் புள்ளிவிவரப் பயன்பாடு பற்றித் தெரிந்திருக்கவேண்டும். சமூக நல நிர்வாகம் பற்றிய கோட்பாட்டுப் புரிதல், வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் சமூக மற்றும் சுற்றுச் சூழல் நிகழ்வுகள், சமூக உளவியல் மதிப்பீடுகளைச் செய்வதற்கும், ஒரே மாதிரி அறிகுறிகளைக் கொண்ட அல்லது தனிப்பட்ட அறிகுறிகள் இல்லாத இரண்டுக்கும் மேற்பட்ட குறைகளை / பிரச்சனைகளை வேறுபடுத்திப் புரிந்துகொள்ளும் திறன் சமூகப்பணியாளருக்குத் தேவை. நிர்வாக அமைப்பும், சமூக அமைப்பும் செயல்படுவதைப் பற்றிய புரிதலும், அந்தப் புரிதலினடிப்படையில் மாற்றங்களைத் துரிதப்படுத்தத் தேவையான அணுகுமுறைகள் பற்றிய அறிவும் சமூகப்பணியாளருக்குத் தேவை. ஒரு சமூக நிகழ்வையோ, ஒரு சமூகக் கருத்தையோ, அல்லது தன் வாடிக்கையாளர் நலன் கருதி, அதை ஆதரித்தோ அல்லது எதிர்ப்புத் தெரிவித்தோ வாதிட்டு உதவுவதற்கு தேவையான உத்திகளைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும். சமூகப்பணியின் தொழில்நெறிகளைப் பற்றிய அறிவும், அதன் முக்கியத்துவம் பற்றிய புரிதலும் கொண்டு அதைக் கடைப்பிடிக்கும் ஒழுங்கு வேண்டும். கருத்துப் பரிமாற்றத்திற்குத் தேவைப்படும் போதனா முறைகளைப் பற்றிய பல்வேறு அணுகுமுறைகளையும், அதை கையாள்வதற்கான உத்திகளும் தெரிந்திருக்கவேண்டும். மத்திய, மாநில, ஸ்தல ஸ்தாபன அரசுகள் சமூக நலம், சமூக பாதுகாப்பு தொடர்பாக முன்னெடுக்கும் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் அணுகுமுறைகள் பற்றிய புரிதலுடன், அதில் தலையிட்டு தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான வழிமுறைகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
English
According to the Standards for the Classification of Social Work Practice (Silver Spring, MD: National Association of Social Workers, 1982, p. 17), social work requires knowledge in some or all of the following areas: social casework and group work theory and techniques; community resources and services; federal and state social services programs and their purposes; community organization theory and the development of health and welfare services; basic socioeconomic and political theory; racial, ethnic, and other cultural groups in society their values and lifestyles and the resultant issues in contemporary life; sources of professional and scientific research appropriate to practice; concepts and techniques of social planning; theories and concepts of supervision and the professional supervision of social work practice; theories and concepts of personnel management; common social, psychological, statistical, and other research methods and techniques; theories and concepts of social welfare administration; social and environmental factors affecting clients to be served; theories and methods of psychosocial assessment and intervention and of differential diagnosis; theory and behavior of organizational and social systems and of methods for encouraging change; community organization theory and techniques; advocacy theory and techniques; ethical standards and practices of professional social work; teaching and instructional theories and techniques; social welfare trends and policies; and local, state, and federal laws and regulations affecting social and health services.