Social Work Month
சமூகப்பணி மாதம்
தமிழ் விளக்கம்
சமூகப்பணி தொழிலைப்பற்றியும், சமூகப்பணியாளர்களின் பங்களிப்பைப் பற்றியும், சமூகப்பணியாளர்கள் கையாளும் சமூகப் பிரச்சனைகள் பற்றியும் பொதுமக்களுக்குத் தெரிவிக்க அமெரிக்காவின் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம், ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் ஏற்பாடு செய்யும் பொது மக்கள் தொடர்பு முயற்சி. ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு கருத்தை மையப்படுத்தி, செய்தி அறிவிப்புகள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள், சேவை அறிவிப்புகள் போன்ற முறைகளைக் கையாண்டு சமூகப்பணியின் முக்கியத்துவம் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது.
English
A public information and media relations effort done every March to educate the public about the social work profession, its mission, and social issues. Sponsored by the National Association of Social Workers (NASW), the activity consists of news releases, media advertisements, public service announcements, and television programs. Each year a theme is highlighted, such as aging parents, homelessness, and AIDS.