social work practice

சமூகப்பணி அப்பியாசம் / தொழில்முறை

தமிழ் விளக்கம்

சமூகப்பணி அறிவைக்கொண்டும், சமூகப்பணியாளர்களின் திறனைக்கொண்டும், சமூகப்பணியின் தொழில் நெறிமுறைகளைப் பின்பற்றி, ஒரு சமூகத்தின் அபிலாட்சையை, சமூக சேவைகளின் மூலமாக நிறைவேற்ற சமூகப்பணியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள். இந்த நடவடிக்கைகள் பிரச்சனைகளைத் தடுத்தல், பிரச்சனைகளிலிருந்து மீட்டல் மற்றும் இழந்துவிட்ட செயல்திறனை புனருத்தாராணம் செய்தல் போன்ற மூன்று நிலைகளில் செய்யப்படுகிறது. குறை (பிணி) தீர்த்தல், நிர்வகித்தல், பரிந்து பேசி வாதிடுதல், வாடிக்கையாளருக்காகப் பிறரிடம் பேசி உதவிகளைப் பெற்றுத் தருதல், குறை நேர்வு மேலாண்மை, தகவலளித்தல், ஆலோசனை சொல்லுதல், தகவல்களை நிர்வகித்தல், மதிப்பிடுதல், ஆதரவு திரட்டுதல், இணக்கமாக்குதல், மேற்பார்வையிடுதல், கற்பித்தல், சமநிலை பேணுதல் என்று பலவகைப்படும். இந்த நடவடிக்கைகளை, சிறிய (தனிமனித -micro) அளவிலும், நடுத்தர (குழு, சமுதாய - meso) அளவிலும், தேசிய (பெரிய (macro) அளவிலும் சமூகப்பணியாளர்கள் எடுக்கிறார்கள்.

English

The use of social work knowledge and social work skills to implement society's mandate to provide social services in ways that are consistent with social work values. Practice includes remediation; restoration (rehabilitating those whose social functioning has been impaired); and prevention. Some of the most important social work practice roles are clinician, administrator, advocate, broker, caregiver, case manager, communicator, consultant, data manager, evaluator, mobilizer, outreacher, planner, protector, researcher, socializer, supervisor, teacher, and upholder of equitable social values. Social work practice may occur in micro practice, mezzo practice, or macro practice.