social work skills
சமூகப்பணித் திறன்கள்
தமிழ் விளக்கம்
தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம், சமூகப்பணியை அப்பியாசிக்க, 12 வகையான இன்றியமையாத் திறன்களை வகைப்படுத்தியுள்ளது. 1. வாடிக்கையாளர்களுடன் உரையாடும்போது அக்கறையுடனும், அவர்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு உதவும் திறன். 2. தகவல்களைக் கேட்டறிந்து, அதைத் தொகுத்து, அதனடிப்படையில் வாடிக்கையாளரின் சமூக வரலாறு தயாரித்து, அதை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் திட்டமிடல் அறிக்கைத் தயார் செய்யும் ஆற்றல். 3. உறவின் மூலமாகவே எல்லாமும் சாத்தியப்படுகிறது என்று சமூகப்பணி நம்புவதால், உணர்வுகளைத் தவிர்த்து, தொழில்முறை சார்ந்த உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ளும் திறமை. 4. ஆளுமைக் கோட்பாடுகள் மற்றும் குறையறியும் முறைகளின் பின்னணியில், வாடிக்கையாளரின் பேச்சு மற்றும் உடல்மொழியை உன்னிப்பாகக் கவனித்துப் புரிந்துகொண்டு, அதனடிப்படையில் செயலாற்றும் திறன். 5. வாடிக்கையாளர்கள் (தனிமனிதர்கள், குடும்பங்கள், குழுக்கள், சமுதாயங்கள்) தங்களுடைய பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளுமளவிற்கு அவர்களுக்கு நம்பிக்கையளித்து, ஈடுபடுத்தும் திறன் 6. தர்மசங்கடமிக்க அந்தரங்க சம்பவங்களைக் கையாளும்போது, வாடிக்கையாளர்களைத் தயக்கதிற்குள்ளாக்காமலும், அச்சுறுத்தலுக்குள்ளாமக்களும் அவர்களிடம் பரிவாக / அனுசரனையாக நடந்துகொள்ளும் திறன். 7. வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளுக்குப் புதுமையான தீர்வுகள் காணும் திறன். 8. சிகிச்சைக்காகத் தொடங்கப்பட்ட உறவை எப்பொழுது முடித்துக் கொள்ளவேண்டும் / அதிலிருந்து வெளியேற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் திறன். 9. ஆய்வுகள் நடத்தவும், மற்றவர்கள் செய்த ஆய்வுகளையும், இலக்கியங்களையும் படித்து, புரிந்து அதைத் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தும் திறன், 10. முரண்படும் குழுக்களிடையே சமரசம் பேசவும், பேரம் பேசவுமான திறன். 11. நிறுவனங்களுக்கிடையே தொடர்பு அதிகாரியாய் / இணைப்புப் பாலமாய் செயல்படும் திறன் 12. சமூகத் தேவைகளைச் சரியான பொருளில், அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விளக்கி அவர்களிடம் நிதி உதவி பெருவதற்கான திறன்.
சமூகப் பணியாளர்களுக்கு தேவையான சில ஆற்றல்களையும் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் பரிந்துரைத்திருக்கின்றது. அவையாவன - சமூகப்பணியாளர்களுக்கு தெளிவாக பேசும் மற்றும் எழுதும் ஆற்றல் இருக்கவேண்டும். கருத்துக்களைப் பிறருக்கு எடுத்துச் சொல்லி கற்பிக்கும் திறன். நெருக்கடியான நேரங்களிலும், உணர்ச்சித் தடுமாற்றமுள்ள நேரங்களிலும் பதட்டமடையாமல் ஆதரவு காட்டும் திறன், உள்விரிவாக்கம் கொண்ட சமூக உளவியல் நிகழ்வுகளை அர்த்தப்படுத்தி பார்க்கும் திறன், வாடிக்கையாளருடன் பழகுவதிலும், அவர்களைக் கையாள்வதிலும் முன்மாதிரியாக நடந்துகொள்ளும் திறன், தாங்கள் செய்யவேண்டிய கடமைகளுக்கு ஏற்றவாறு, தங்கள் பணிச்சுமையை திட்டமிடும் திறன், உதவி தேவைப்படுபவர்களுக்கான உதவி ஆதாரங்களை அடையாளம் கண்டு அதைப் பெறும் திறன், தங்களுடைய உணர்வுகளையும், செய்கைகளையும் சுயமதிப்பீடு செய்துகொள்ளும் திறன், முக்கியமான குழுகூட்டங்களில் கலந்துகொண்டு கருத்து பரிமாறிக்கொள்ளும் திறன், நெருக்கடியான, மனச் சோர்வு தரக்கூடிய நிலைகளிலும் நிதானமிழக்காமல் செயல்படும் திறன், சச்சரவுகளையும், மோதல் போக்குகளையும் கையாளும் திறன், சமூகவியல் மற்றும் உளவியல் கோட்பாடுகளை தன்னுடைய பணித்தேவைக்கு ஏற்றவாறு பொருத்திப்பார்க்கும் திறன், ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பொருத்தமான தகவல்களை அடையாளம் கானும் திறன், தங்களுடைய செயல்முறைகளையோ அல்லது நிறுவனச் சேவைகள் பற்றியோ ஆய்வு செய்யும் திறன்,

English
The Standards for the Classification of Social Work Practice (Silver Spring, MD: National Association of Social Workers, 1982, pp. 17-18) identifies 12 essential skills in social work. They are being able to (1) listen to others with understanding and purpose; (2) elicit information and assemble relevant facts to prepare a social history, assessment, and report; (3) create and maintain professional helping relationships; (4) observe and interpret verbal and nonverbal behavior and use knowledge of personality theory and diagnostic methods; (5) engage clients (including individuals, families, groups, and communities) in efforts to resolve their own problems and to gain trust; (6) discuss sensitive emotional subjects supportively and without being threatening; (7) create innovative solutions to clients' needs; (8) determine the need to terminate the therapeutic relationship; (9) conduct research or interpret the findings of research and professional literature; (10) mediate and negotiate between conflicting parties; (11) provide interorganizational liaison services; and (12) interpret and communicate social needs to funding sources, the public, or legislators. The same policy statement identified the abilities necessary for social work practice. Social workers should be able to speak and write clearly, teach others, respond supportively to emotion-laden or crisis situations, serve as role models in professional relationships, interpret complex psychosocial phenomena, organize a workload to meet designated responsibilities, identify and obtain resources needed to assist others, assess their own performances and feelings and use help or consultation, participate in and lead group activities, function under stress, deal with conflict situations or contentious personalities, relate social and psychological theory to practice situations, identify the information necessary to solve a problem, and conduct research studies of agency services or their own practices. See also direct practice skills.