social work team

சமூகப்பணி அணி, சமூகப்பணிக் குழு

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை அடைய, சமூகப்பணியாளரைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் அணி / குழு. இதில் சமூகப்பணியாளர்கள், சமூகப்பணி உதவியாளர்கள், சமூகப்பணியாளருடன் உடனுதவுபவர், உள்ளூர் பணியாளர்கள், தன்னார்வலர்கள், தற்காலிக நிபுணர்கள் என்று பலரும் இணைந்து, சமூகப்பணியாளரின் தலைமையில் செயல்திட்டத்தை வகுத்து, அவரவர்க்கான பொறுப்புகளைப் பிரித்துக்கொண்டு, குறிக்கோளை அடையக் கூட்டாக முயல்வர். சமூகப்பணியாளர் தலைமையேற்று அணியை நடத்துவதுபோல், சமூகப் பணியாளர்களும், மனநலம், மருத்துவம், வளர்ச்சிப் பணிகளில் பிறதுறை நிபுணர்கள் தலைமையில் செயல்படும் குழுக்களில் உறுப்பினராகச் செயல்படுவதுமுண்டு.

English

A system for delivering social services in which several professional social workers, social work associates, case aides, indigenous workers, volunteers, and various ad hoc specialists work in an integrated and coordinated way to achieve a specified goal. The team members discuss in advance all the activities that can be accomplished to achieve the goal efficiently, and then various assignments toward that end are made by the social worker-team leader. Social workers also participate in interdisciplinary teams in such fields as mental health, health care, and developmental care.