social worker cooperatives
சமூகப்பணியாளர் கூட்டுறவுகள்
தமிழ் விளக்கம்
ஒரு திறத்தொழிலினர் குழுவோ அல்லது அத்தொழில் சார்ந்த தொழில் துணைவர்களோ தங்களுக்குள் கூட்டாக ஒன்றிணைந்து, அக்குழுவிற்குத் தனியுரிமையுடையதான ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அவர்களோ அல்லது அவர்களால் நியமிக்கப்பட்டவர்களோ இலாப நோக்கத்துடனோ அல்லது இலாப நோக்கமற்றோ சமூக சேவைகளை வழங்கும் முறை தொழிற் கூட்டுறவுகள் எனப்படும். இந்தக் கூட்டுறவில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களும் (நிறுவனர்களும்), பணிபுரிபவர்களும், சேவை செய்வது மற்றும் பிற விசயங்களைப் பற்றி இணைந்தே முடிவெடுப்பார்கள். இக்கூட்டுறவுகளுக்கான நிதி ஆதாரம் அவர்கள் சேவை செய்யும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ அல்லது குறிப்பிட்ட சேவைகளை வழங்க அரசு கொடுக்கும் மானியங்களிலிருந்தோ பெறப்படுகிறது.
English
A form of proprietary practice in social work in which an organization is formed, staffed, and owned by a group of professionals and sometimes paraprofessionals who provide for-profit or nonprofit social services. The cooperatives' owner–workers participate equitably in decision making and direct practice. Income is often derived from grants or capitation fees from third parties or governments to provide specified social services.