socialism

நிகரறம், சம உடைமை, பொதுநலக் கோட்பாடு, நிகரமைவியம், அபேதவாதம், பொதுநலனை முன்னிட்டுத் தனிப்பட்டவர்களின் உரிமையைக் கீழ்ப்படுத்த வேண்டுமென்னுங் கோட்பாடு, சமூகவுடைமை வாதம், பொதுவுடமை வாதம்

தமிழ் விளக்கம்

சமவுடைமை அல்லது சமூகவுடைமை (Socialism) என்பது ஒரு அரசியல் - பொருளியல் கோட்பாடு. பொருளாதார நிர்வாகத்தில் மிக அதிகமான அரச அதிகாரத்தை / பங்களிப்பை வலியுறுத்துகின்றது. உற்பத்திக் காரணிகள் (Means of Production) மற்றும் இயற்கை வளங்கள் அரசு அல்லது சமூகக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. முக்கிய துறைகள் அரசுடைமையாக இருப்பதையும், சமத்துவத்தை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தியும், இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவ கொள்கைகள், தனி நபர்களிடம் செல்வம் குவிதலை எதிர்த்தும் அமைகின்றன. தொழிற்புரட்சி மற்றும் முதலாளித்துவம் உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வாக சமவுடமைக் கோட்பாடு முன்வைக்கப்பட்டது.

English

A system of economic organization in which all or most of the planning is centralized, and most of the means of production are controlled by the government or a collective institution.