socialization

சமூகமயமாதல்

தமிழ் விளக்கம்

1. சமூகமொன்றில் ஒரு மனிதன் தானும் ஒரு அங்கத்தவனாக இணைந்து வாழ எடுக்கின்ற முயற்சி அல்லது அவ்வாறு இணைந்து வாழ அவனுக்குச் சமூகம் வழங்குகின்ற பயிற்சி சமூகமயமாதலாகும். 2. ஒரு மனிதன் சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்குத் தேவையான சமூக, சமய, கலாச்சார, பண்பாட்டு, ஒழுக்க சேவைகள் மற்றும் சமூக விழுமியங்கள் போன்ற விஷயங்களைக் கற்றுத் தானும் ஒரு சமூக அங்கத்தவனாக வாழ்வதற்கு முயலும் செயல்முறை சமூகமயமாக்கல் என வரையறுக்கப்படுகின்றது. 3. சமூகமயமாக்கல் என்பது தனி மனிதன் மிருகமாக இருக்கும் நிலையிலிருந்து ஆளுமை உடைய மனிதனாக வாழக் கற்றுக் கொள்கின்ற செயற்பாடு என சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 4. ஒரு மனிதன் தன்னை சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுத்திக் கொண்டு ஒதுங்கி விடாமல், தனது கலாச்சாரச் சமூகத்தின் பழக்க வழக்கங்களையும் நடைஉடை பாவனைகளையும் உணர்ந்து, அறிந்து ஏற்று வாழ்தலே சமூகமயமாகலாகும். 5. மக்கள் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவில் உறுப்பினர்களாகச் செயற்படுகின்ற வகையில் செயல் நோக்கம், அறிவு, மொழி, பல்வேறு திறன்கள், விழுமியங்கள், விதிமுறைகள், வாழ்வின் பல்வேறு நிலைகள் ஆகியவற்றைப் பெறும் வகையிலான ஒரு செயற்பாடே சமூகமயமாகலாகும் என எமில் டேர்க்கேம் (Emile Durkhem) குறிப்பிடுகின்றார். 6. ஒரு தனியாளை, ஒரு உயிரினை சமூகத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவது சமூகமயமாகலாகும். 7. ஒரு குழந்தையானது கருவில் இருந்து தோற்றம் பெறும் போது அது தானாகச் செயற்பட முடியாத நிலையில இன்னொரு உயிரின் உதவியுடன் அவனை வளர்த்துச் சமூகத்திற்கு ஏற்ற விதத்தில் உருவாக்குதல் சமூகமயமாகலாகும். இச் சமூகமயமாதல் இரு வகைப்படும் 1.நுண்நிலைச் சமூகமயமாக்கல் 2. பருநிலைச் சமூகமயமாக்கல்
நுண்நிலைச் சமூகமயமாக்கல் (micro) என்பது சமூக இடைவினை, சமூகக் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலமாக சமூகமயமாக்கப்படுதலாகும். பருநிலை சமூகமயமாதல் (macro) என்பது குறித்த சமூகத்தின் பண்பாடு, சமூகக் கட்டமைப்பு, குழுக்கள், நிறுவனங்கள் போன்ற மையங்களின் ஊடாக சமூகமயமாக்கப்படுதலாகும்.
சமூகமயமாக்கலில் ஈடுபடும் நிறுவனங்களான குடும்பம், பாடசாலை, தொழில் நிறுவனங்கள், ஆலயங்கள், இளைளோர் கூடங்கள், சரியினை (வயது) குழுக்கள் (Peer Groups) , இரகசிய சங்கங்கள் குழுக்கள் போன்றவற்றினைக் குறிப்பிடலாம். ஒரு தனிநபர் சமூகமயமாக்கப்படும் போது அவற்றைப் பல வகையாகப் பிரிக்கலாம். அவையாவன ஆரம்ப சமூகமயமாக்கல் (Primary Socialization), இரண்டாம் நிலைச் சமூகமயமாக்கல் (Secondary Socialization), அபிவிருத்தி சமூகமயமாக்கல் (Development Socialization), மீள் சமூகமயமாக்கல் (Re- Socialization), பாதிக்கப்பட்டவர்களுக்கான சமூகமயமாக்கல் (Victim Socialization)

English

The process by which the roles, values, skills, knowledge, and norms of a culture are transmitted to individual members in the society.