socialized conduct disorder

சமூகமயமாக்களால் ஏற்படும் நடத்தைக்கோளாறு

தமிழ் விளக்கம்

பார்க்க: Conduct Disorder - (சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் ஏற்படும்) நடத்தைக் கோளாறுகள் - நடத்தைக் கோளாறு என்பது அந்தந்த வயதிற்குத் தகுந்த நடத்தை நெறிகளையும், சமூக நெறிகளையும் பின்பற்றாது மற்றவரின் உரிமைகளைத் தொடர்ந்து மீறுவது. சிறுவர்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் நான்கு வகையான நடத்தைக் கோளாறுகள் பொதுவாகக் கண்டறியப்பட்டுள்ளன. 1. அடாவடியாக நடந்துகொள்ளல் (வலுச் சண்டைக்குச் செல்லல் - அச்சுறுத்தல், அடிதடியில் இறங்குதல்), 2.. வன்முறையற்ற வகையில் இழப்பை ஏற்படுத்தல் (சொத்து இழப்பு), 3. ஏமாற்றுதல் திருடுதல், 4. விதிமுறைகளைத் துச்சமென மதித்தல். இந்த மாதிரியான கோளாறுகள் 10 வயதிற்குள் வந்தால், அது குழந்தைப் பருவக் கோளாறு என்றும், 10 வயதிற்கு மேல் வந்தால் குமரப்பருவக் கோளாறு என்றும் சொல்வர்.

English

See conduct disorder.