socialized medicine

தேசிய சுகாதார சேவை, பொது மருத்துவ சேவை

தமிழ் விளக்கம்

ஒரு தேசிய அரசாங்கமே சுகாதார / மருத்துவ சேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அதில் சேவை செய்யவும், நிர்வகிக்கவும் தகுதியான பணியாளர்களை நியமித்து, அதற்குண்டாகும் செலவினங்களை வரி வருவாய் மூலமும், வர்த்தக வருவாய் மூலமும் செய்யும் நடைமுறை. பல நாடுகளில் இந்த நடைமுறை தேசிய மருத்துவ / சுகாதார சேவை என்றே அழைக்கப்படுகிறது. இது தேசிய ஆரோக்கியக் காப்பீட்டு திட்டத்துடனோ அல்லது அரசே காப்பீட்டு கட்டணப் பணம் செலுத்தும் திட்டத்துடனோ ஒப்புமைப்படுத்த முடியாது. பொது சுகாதாரத் திட்டங்களிலுள்ள தரமின்மை, அரசாங்கக் கட்டுப்பாடுகள், அரசிற்கு ஏற்படும் செலவினங்கள் மற்றும் அரசுத் திட்டங்களிலுள்ள கிடைத்தற்கருமை மற்றும் அணுகுதற்கு அருமை போன்றவற்றை விமர்சிப்பவர்கள், அதைக் கேலியாகக் குறிப்பிட சமூகமயமாக்கப்பட்ட மருத்துவம் என்ற இச்சொல்லாடலை உபயோகப்படுத்துகின்றனர்
பார்க்க: National Helath Insurance - தேசிய ஆரோக்கியக் காப்பீட்டுத் திட்டம் - ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், காப்பீடு முறையில் மருத்துவச் செலவினங்களை நோயாளிகளே ஏற்றுக்கொள்ளும் தன்மையில் ஒன்றுபோலிருப்பது. தனது சம்பளத்திலிருந்தோ அல்லது வருமானத்திலிருந்தோ செலுத்தப்படும் தொடர் சந்தா முறையால் இத்திட்டம் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆரோக்கிய (மருத்துவ) சேவையளிக்கும் நிறுவனம் அரசுத் துறையாகவோ தனியார் துறையாகவோ இருக்கலாம். இதை தேசிய சுகாதாரச் சேவைகளுடன் ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது
National Health Services - தேசிய சுகாதார சேவை - அரசே நேரடியாக தன்னுடைய மக்களுக்காக மருத்துவர்கள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்தி முழுமையான சுகாதார / ஆரோக்கியப் பராமரிப்புப் பணிகளைச் செய்து தருவது. இதை பொது மருத்துவ சேவை அல்லது சமூகமயமாக்கப்பட்ட மருத்துவ சேவை என்றும் சொல்லலாம். ஒருவகையில் இது இலவச மருத்துவ சேவை. அமெரிக்காவில் இந்த மாதிரியான சேவைகள் இல்லையென்றாலும், இராணுவத்தில் சேவை செய்தவர்கள், ஆய்தப்படை வீரர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் போன்றவர்களுக்கும், காச நோயாளிகளுக்கும், அமெரிக்க இந்தியர்களுக்கும் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இதை தேசிய ஆரோக்கியக் காப்பீட்டுத் திட்டத்தோடு குழப்பிக் கொள்ளக்கூடாது.

English

A health care system in which a national government directly employs health care providers, builds and maintains health care facilities, and pays for this care through public taxation and international trade revenues. This system is more commonly known as national health service and is used by many nations. It is not synonymous with national health insurance or the single-payer health care plans. The term "socialized medicine", rather than "national health service", is often used derisively by its opponents to convince the public that it is inefficient, lowers standards, increases government control and spending, and reduces accessibility.