sociocultural dislocation

சமூக கலாச்சார இடப்பெயர்வு

தமிழ் விளக்கம்

தனிமனிதர்களோ அல்லது குழுக்களோ, ஒரு சமூகக் கலாச்சார அமைப்பிலிருந்து அவர்களுக்குப் பரிச்சயமில்லாத, அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத அல்லது அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்ற இன்னொரு சமூகக் கலாச்சார அமைப்பிற்கு இடம் பெயர்வது. இந்த இடப்பெயர்வு நிரந்தரமாக இருக்கலாம், வேற்றுக் கலாச்சாரத்தில் உள்ளடங்கலாம். வேற்றுக்கலாச்சாரத்தை அகப்படுத்திடலாம். எடுத்துக்காட்டாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து, பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு நிரந்தரமாக இடம் பெயர்தல் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய, சேரிப்பகுதியில் வசிக்கும் ஒருவர், அதிநவீன நிர்வாகத்தில் இயங்கும், வசதியானவர்கள், உயர்கல்வி தகுதி படைத்தவர்கள், உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் பணி செய்வது, ஓரளவு சமூக கலாச்சார இடப்பெயர்வை ஒத்ததே.

English

The movement of an individual or group into a sociocultural system that has unfamiliar or unacceptable norms. The move may be permanent and inclusive, as in migrating from a Third World nation to an economically developed one, or it may be temporary and partial, as experienced by some racial and ethnic groups who live in ghetto areas and have jobs in affluent offices dominated by white people. See also relocation camps.