sociofugal arrangements

சமூகத் தொடர்பின்மையைத் தூண்டும் ஏற்பாடுகள் / அமைப்பு, மையப்படுத்தப்படாத சமூக அமைப்பு

தமிழ் விளக்கம்

மனிதர்களை ஒருவருக்கொருவர் இயல்பாகத் தொடர்பு கொள்ளமுடியாமல், உறவாடமுடியாமல் வடிவமைக்கப்பட்ட அலுவலகங்கள், இருக்கை வசதிகள் மற்றும் உள்அலங்கார வேலைப்பாடுகள். எடுத்துக்காட்டாக ஒரு சமூகப்பணியாளரின் அலுவலக அறையும் வரவேற்பு அறையும், அதிக வெளிச்சமின்றி, குறுகலான வரந்தாவில், வாடிக்கையாளர்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் போடப்பட்ட இருக்கைகளில் காத்திருக்க வைப்பது. யார் முகத்தையும் பார்க்கமுடியாமல், யாரிடமும் பேசமுடியாத, பேசினாலும் அருகிலிருப்பவருக்கு தொந்தரவாக அமையும் இருக்கை அமைப்பு.
பார்க்க: centrifugal - மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற / ஒட்டுந்தன்மையற்ற / விட்டேத்தியான உறவுகளைக் கொண்ட குடும்பம் - குடும்ப அமைப்பு கோட்பாட்டின்படி, குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் பற்றற்றும், பிடிமானமாற்றும், தங்களுக்கான உணர்வு பூர்வமான அரவணைப்பை குடும்பத்திற்கு வெளியே தேடுதல்.
centripetal - மையத்தை நோக்கிய இணக்கமான, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள குடும்ப அமைப்பு.

English

The physical design, setting, and decor of offices and facilities that tend to keep people apart and inhibit their interaction. For example, a social worker's sociofugal office and waiting room might contain stiff chairs lined straight against walls that are too far apart for easy communication; long, dark hallways in which clients must wait before seeing the social worker; and metal desks and filing cabinets that act as barricades and further isolate the social worker from the client. See also sociopetal arrangements.