sociolinguistics
சமூக மொழியியல்
தமிழ் விளக்கம்
மனிதர்களின் பண்பாட்டுச் சூழல், பொருளாதார நிலை, எதிர்பார்ப்புக்கள், சூழல் போன்ற அம்சங்கள் மொழியைப் பயன்படுத்துவதில் என்ன மாதிரியான செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை அறியும் அறிவியல் சமூக மொழியியல் எனப்படுகிறது. இனம், சமயம், தகுதி, பால், கல்வி நிலை போன்ற சமூகக் காரணிகளால் வேறுபடுத்தப்படுகின்ற குழுக்களிடையே எவ்வாறு மொழி வேறுபடுகின்றது, இத்தகைய வேறுபாடுகளின் தோற்றமும், கடைப்பிடிப்பும், தனிமனிதர்களை சமூக வகுப்புக்கள் அல்லது சமூகப் பொருளாதார வகுப்புகளுக்குள் வகைப்படுத்துவதற்குப் பயன்படுகின்றன போன்ற விடயங்களும், சமூக மொழியியலின் கீழ் ஆய்வு செய்யப்படுகின்றன. மொழியின் பயன்பாடு இடத்துக்கிடம் வேறுபடுவதுபோல், சமூகப் பிரிவினர் மத்தியிலும் மொழிப் பயன்பாடு வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவ்வாறு ஏற்படுகின்ற சமூக மொழி வழக்குகளையே சமூக மொழியியலாளர் ஆய்வு செய்கின்றனர்.
English
The study of language in relation to the social context in which it is expressed. The social work interviewer can understand the context of the transaction much more fully through a microanalysis of such sociolinguistic concerns as repetitions, interruptions, silences, pause placements, words emphasized, and hesitations.