sociopath

சமூகவிரோதத் தன்மை, சமுதாயத்தை எதிர்த்து வாழும் பண்புடையவர்

தமிழ் விளக்கம்

இது சமூகவிரோத ஆளுமை எனப்படும். இது பதினோரு வகைகளாக விளக்கப்படும் ஆளுமைக் கோளாறுகளில் ஒரு வகை. சமூகவிரோத ஆளுமைக்கோளாறு என்பது ஒருவர் சார்ந்த பண்பாட்டிற்கு எதிராக, ஓரளவோ அல்லது முழுமையாகவோ நடந்துகொள்ளும் முறை. மனிதர்களுடனும், அமைப்புகளுடனும் மோதல் போக்கைக் கடைபிடிக்கின்ற, மற்றவர்களுக்கு இழப்பையும், துன்பத்தையும் தருகிற மாதிரி பொறுப்பற்று நடந்துகொண்டு, அதற்காகக் குற்ற உணர்வு கொள்ளாதிருப்பது, பிறர்மேல் குற்றம் சுமத்தும் மனோபாவம், பிறரிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதிருப்பது, ஏமாற்றங்களின் போது பொறுமை இழப்பது, மற்றும் சமூகமயமாதலில் குறைபாடு போன்றவை இந்த ஆளுமைக் கோளாறின் அடையாளம்.
பார்க்க: dys -bad; difficult -dyssocial - ஒரு நபர் தான் சார்ந்துள்ள குழுவின் விதிமுறைகளைப் பின்பற்றினாலும், பரந்த சமூகத்தின் நெறிமுறைகளுக்கு மாறாகக் குற்றச் செயல்களிலும், அழிவு வேலைகளிலும் ஈடுபடுவது. தற்போது 'சமுதாயத்தை எதிர்த்து வாழும் பண்புடையவர். (sociopath) என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுகின்றது.
##பதினொரு வகையான ஆளுமைச் சிக்கல்களாவன 1. சந்தேக ஆளுமை (Paranoid personality disorder) , 2. மனப்பிளவு ஆளுமை (Schizoid personality disorder), 3.மிகு மனப்பிளவு ஆளுமை (Schizotypal personality disorder), 4. சமூகவிரோத ஆளுமை (Antisocial personality disorder), 5. ஸ்திரமற்ற ஆளுமை (Borderline personality disorder), 6 நாடகப்பங்கான ஆளுமை (Histrionic personality disorder), 7. தற்பூசனை (தற்காதல்) ஆளுமை (Narcissistic personality disorder), 8. தவிர்க்கும் ஆளுமை (Avoidant personality disorder), 9.சார்ந்திருக்கும் ஆளுமை (Dependent personality disorder), 10. அலைபாயும் ஆளுமை (Obsessive-compulsive personality disorder), 11.நோயினால் ஏற்படும் ஆளுமை மாற்றம் (Personality change due to another medical condition), 12. மேற்சொன்ன எந்த வகையிலும் அடங்காத ஆளுமை (Personality disorder not otherwise specified),

English

See dyssocial.