sociopetal arrangements
சமூக உறவாடலைத் தூண்டும் அமைப்புகள், சமூக மைய அமைப்பு
தமிழ் விளக்கம்
மனிதர்கள் ஒருவருக்கொருவர் இயல்பாக உறவாட வடிவமைக்கப்பட்ட அலுவலகங்கள், இருக்கை வசதிகள் மற்றும் உள்அலங்கார வேலைப்பாடுகள். எடுத்துக்காட்டாக ஒரு சமூகப்பணியாளரின் அலுவலகமும், வரவேற்பு அறையும் வெளிச்சமாகவும், ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும்படியாகப் போடப்பட்ட இருக்கைகளும், அருகிலிருப்பவருடன் உரையாடத் தூண்டும்படியான வடிவமைப்பு கொண்டதை sociopetal அலுவலகம் எனலாம்
பார்க்க; sociofugal arrangements - சமூகத் தொடர்பின்மையைத் தூண்டும் ஏற்பாடுகள் / அமைப்பு, சமூக மையமின்மை அமைப்பு - மனிதர்களை ஒருவருக்கொருவர் இயல்பாகத் தொடர்பு கொள்ளமுடியாமல், உறவாட முடியாமல் வடிவமைக்கப்பட்ட அலுவலகங்கள், இருக்கை வசதிகள் மற்றும் உள்அலங்கார வேலைப்பாடுகள். எடுத்துக்காட்டாக ஒரு சமூகப்பணியாளரின் அலுவலக அறையும் வரவேற்பு அறையும், அதிக வெளிச்சமின்றி, குறுகலான வரந்தாவில், ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் போடப்பட்ட இருக்கைகளில் வாடிக்கையாளர்களை காத்திருக்க வைப்பது. யார் முகத்தையும் பார்க்க முடியாமல், யாரிடமும் பேசமுடியாத, பேசினாலும் அருகிலிருப்பவருக்குத் தொந்தரவாக அமையும் இருக்கை அமைப்பு.
பார்க்க: centrifugal மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற - ஒட்டுந்தன்மையற்ற / விட்டேத்தியான உறவுகளைக் கொண்ட குடும்பம் - குடும்ப அமைப்புக் கோட்பாட்டின்படி, குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் பற்றற்றும், பிடிமானமாற்றும், தங்களுக்கான உணர்வு பூர்வமான அரவணைப்பை குடும்பத்திற்கு வெளியே தேடுதல்.
centripetal மையத்தை நோக்கிய இணக்கமான, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள குடும்ப அமைப்பு

English
The physical design, setting, and decor of offices and facilities that tend to draw people together and encourage interaction. For example, a social worker's sociopetal office might have comfortable chairs close to one another at attractive angles, have good lighting and music in the waiting area, and use file cabinets to form conversation nooks rather than barricades. See also sociofugal arrangements.