solidarity movement

ஒற்றுமை / ஐக்கிய இயக்கம்

தமிழ் விளக்கம்

சோவியத் கூட்டணி நாடான போலந்தில், போலந்தின் ஜானாதிபதியான (1990-1995) லெக் வாலேசா (Lech Wałęsa) என்பவரால், அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்பே, 1980 இல், தொழிலாளர்களின் உரிமைக்காகவும், மேம்பட்ட வேலை நிலைகளுக்காகவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கும் உத்திகளை அறிமுகப்படுத்த வேண்டியும், ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரமான தொழிற்சங்கம். இரும்புத்திரை நாடுகளென கருதப்பட்ட வார்சா உடன்படிக்கை நாடான போலந்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கமே, கம்யூனிச தொழிற்சங்கங்களின் செல்வாக்கைப் பெருமளவு குறைத்து, இரஷ்ய சமஷ்டி அரசு உடையக் காரணமாயிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

English

The labor movement that began in Gdansk, Poland, in the late 1970s to advocate for better working conditions and more efficient means of productivity. Many historians consider this movement to be the precipitator of the downfall of the Communist system of governing Eastern European (Iron Curtain-Warsaw Pact) nations and the end of the Cold War.