solitary aggressive-conduct disorder
தனியாக அடாவடித்தனத்தில் ஈடுபடுதல்
தமிழ் விளக்கம்
(சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் ஏற்படும்) நடத்தைக் கோளாறுகள் என்பது அந்தந்த வயதிற்குத் தகுந்த நடத்தை நெறிகளையும், சமூக நெறிகளையும் பின்பற்றாது, மற்றவரின் உரிமைகளைத் தொடர்ந்து மீறுவது. இந்த அடாவடி (aggressive) நடத்தைக் கோளாறுகள் பலவிதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குடும்பச் சூழலில் நடப்பது, சரியாகச் சமூகமயமாகமல் தனித்திருப்பதால் வரும் அடாவடித்தனம், குழுவோடு சேர்ந்திருக்கும் போது தோன்றும் அடாவடித்தனம். தனித்திருக்கும் போது அடாவடித்தனத்தில் ஈடுபடும் நடத்தைப் போக்கு, மற்ற நடத்தைப் போக்குகளை விட ஆபத்தானது.
English
That type of conduct disorder in which the person's pattern of antisocial behavior is harmful or threatening to others and does not take place within the context of a group or gang. This is considered usually more pathological than the group-type conduct disorder.