solution-focused social work
தீர்வை மையப்படுத்திய சமூகப்பணி
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளரின் பிரச்சனைகளை விலாவாரியாகப் புரிந்துகொண்டு, அதனடிப்படையில் தீர்வுக்கு வருவதை விட, ஒரு வாடிக்கையாளரின் ஆற்றல், அவருக்குக் கிடைக்கும் ஆதரவு, அவரால் பெறமுடிந்த உதவியாதாரங்களை மனதில் கொண்டு, அதே ஆற்றலும், பின்னணியும் கொண்ட ஒருவர் தன்னுடைய பிரச்சனையைக் எப்படிக் கையாண்டு தீர்வு கண்டார் என்பதை முன்மாதிரியாகக் கொண்டு, பிரச்சனைக்குத் தீர்வு சொல்வது. கடந்த காலத்தை, பிரச்சனைகளை மையைப்படுத்துவதை விட வாய்ப்புகளை, எதிர்காலத்தை மையப்படுத்தும் அணுகுமுறை.
English
An orientation in social work intervention that examines how progress is made rather than in defining what problems exist. The focus is on the client's strengths, supports, and resources and considers how others with similar strengths have dealt with similar situations.