somatization disorder
நோயுற்றிருப்பதான பிரமை
தமிழ் விளக்கம்
நோயறி முறைகளால் கண்டறியமுடியாத, தெளிவற்ற, மருந்துகளின் பக்க விளைவுகளாலோ, காயத்தாலோ அல்லது வேறு நோயின் வெளிப்பாடாக இல்லாமலிருந்தும் நோயாளி நோயுற்றிருப்பதான பிரமை - நீண்டகாலம் தனது மனக்குறையாகச் சொல்லிவரும், உண்மை என்று நம்பும் உடல்சார்ந்த கோளாறுகள். இந்த மனக்குறை நான்குவிதமான உடற்கோளாறுகளை உள்ளடக்கியது. 1. வலி - தலைவலி, முதுகு வலி, வயிற்று வலி, மூட்டு வலி மற்றும் நெஞ்சு வலி 2. வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வீக்கம், உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற ஜீரண மண்டலக்கோளாறுகள் 3. பாலுறவின் போது விறைப்பின்மை, உடலுறவின் போது தாங்கமுடியாத வலி, உடலுறவில் ஆர்வமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் வலி, 4. தள்ளாட்டம், சில உறுப்புகளில் உணர்வின்மை, சோர்வு, வலிப்பு, கண் பார்வை மங்கல் போன்ற அறிகுறிகள். மருத்துவ ரீதியாக இந்த அறிகுறிகள் ஊர்ஜிதப்படுத்தப் படாவிட்டாலும், இந்த உபாதைகள் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளைப் பாதித்து, காலப்போக்கில் மன நோய்களுக்கு வித்திடும்.
English
One of the somatoform disorders, characterized by a subject's long history of complaints about symptoms that are not caused by physical disease, injury, or drugs. Symptoms include being sickly for much of one's life, gastrointestinal symptoms (such as abdominal pain, nausea, vomiting, or diarrhea), pseudoneurological symptoms (such as fainting, muscle weakness, blurred or double vision, or memory loss), psychosexual symptoms (indifference to or pain during intercourse), pain, palpitations, shortness of breath, and reproductive disorders.