somatoform disorders
உடல்சார்ந்த கோளாறுகள்
தமிழ் விளக்கம்
மருந்துகளின் பக்க விளைவுகளாலோ, காயத்தாலோ அல்லது வேறு நோயின் வெளிப்பாடாக இல்லாமல், நோயறி முறைகளால் கண்டறியமுடியாத தெளிவற்ற, ஆனால் நோயாளி நீண்டகாலம் தனது மனக்குறையாகச் சொல்லி, உண்மை என்று நம்பும் உடல்சார்ந்த கோளாறுகள். இந்தக் கோளாறுகள் பலவகைப்படும். Body dysmorphic disorder என்ற உடல்வாகைப் பற்றிய கற்பனையான கவலை (சாதாரண உடல்வாகையும், தோற்றத்தையும் கொண்டிருந்தாலும், தன்னுடைய உடல்வாகிலும் தோற்றத்திலும் குறை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு கவலைப்படுபவர்). hypochondriasis என்றழைக்கப்படும் கற்பனைப் பிணியாளி, மௌட்டிய நோயாளி, மனவாட்ட நோய்க்காளானவர். conversion disorder என்ற எந்தவிதமான வெளிப்படையான காரணங்களின்றி மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் உடல் ரீதியாக வரும் உபாதைகள். வலிப்பு, மயக்கம், (உளப்பிரச்சனைகள் உடல் உபாதைகளாக மாறும் தன்மை), psychogenic pain disorder உள்ளம் உருவாக்கும் உடல் வலி உளப்பிரச்சனைகள் உடல் உபாதைகளாக மாறும் தன்மை. இது தவிர மேலே கண்ட அறிகுறிகள் அவ்வப் பொழுது வந்து சென்றால் அதை வகைப்படுத்தமுடியாத உடலுபாதைக் கோளாறு எனலாம்.
English
Mental disorders that have the appearance of physical illness but, lacking any known organic basis, are generally thought to be psychogenic. The specific disorders in this category are somatization disorder, body dysmorphic disorder, hypochondriasis, conversion disorder, and psychogenic pain disorder. When the individual experiences only a few of these symptoms of a shorter duration, the diagnosis is "undifferentiated somatoform disorder".