somnambulism

தூக்கத்தில் நடத்தல்

தமிழ் விளக்கம்

தூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking, somnambulism) என்பது ஒருவகைத் தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்கும். தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச் செயல்முறை படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்குமளவு தூக்கத்தில் சமைப்பது, வாகனம் ஓட்டுவது, தீங்குவிளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவையாக இருக்கலாம், சிலவேளைகளில் வேறோருவரைக் கொலை செய்யும் துயில்நடை புரிவோரும் உண்டு. துயில் நடை புரிவோருக்குத் தாம் தூக்கத்தில் என்ன செய்கின்றோம் என்பது தெரியாது, ஏனெனில் அவர்கள் சுய அறிவில் அந்நேரத்தில் இருப்பதில்லை. இவர்களது கண்கள் திறந்திருந்தாலும் வெளியுலகுடன் தொடர்பு மங்கியதாகவே இருக்கும். துயில் நடை 30 செகண்டுகளில் இருந்து 30 நிமிடம் வரை நீடிக்கலாம்.

English

See sleepwalking disorder.