Southern Christian Leadership Conference (SCLC)
தெற்கத்திய கிறிஸ்தவத் தலைவர்கள் மாநாடு
தமிழ் விளக்கம்
மார்டின் லூதர் கிங்கால் (Martin Luther King, Jr), 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும், ஆப்ரிக்கா அமெரிக்கர்களின் சம உரிமைக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமை இயக்கம். இந்த இயக்கம் நடத்திய பல போராட்டங்களில், 1962 இல் அலபாமாவில் வன்முறையற்ற வழியில் நடத்திய அறப்போராட்டம் உலகின் கவனத்தையும், அமெரிக்கர்களின் கவனத்தையும் ஈர்த்தது. கிங் தலைமையில், 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்குப் பேரணி' என்று இவ்வியக்கம் நடத்திய மிகப் பெரிய பேரணியில் பெருமளவில் மக்கள் திரண்டனர். அப்போதுதான் மார்டின் லூதர் கிங் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
English
The civil rights organization founded in 1956 by Martin Luther King, Jr., and others whose goal is the peaceful combat of racially motivated injustice.