Specht, Harry (1929-1995)
ஸ்பெச் ஹாரி (1928-1995)
தமிழ் விளக்கம்
ஸ்பெச் ஹாரி (1928-1995) - வசதிகளற்ற குழந்தைப்பிராயத்தில் இவருக்குச் செய்யப்பட்ட சமூகப்பணியாளர்களின் உதவி, இவர் பின்னாளில் சமூகப்பணியாளராகத் தூண்டுகோலாயிருந்தது. சமூகப்பணிக் கல்வியை முடித்து நியூயார்க் சமுதாய ஊழியரகத்தில் பணிபுரிந்து, பின்னர் இளைஞர்களை அணிதிரட்டும் ஆய்வுப் பணியில் சிறிது காலம் பணியாற்றி விட்டு, கலிபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக்கழகத்தில் சமூகப்பணித் துறைப் பேராசிரியராகச் சேர்ந்து, துறைத்தலைவராக நீண்ட காலம் பணியாற்றினார். வறுமை ஒழிப்பு மற்றும் சமூகநீதி என்ற மாபெரும் சமூகப்பணி இலட்சியங்களை மறந்து, உளப்பாகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட தனிமனித சமூகப்பணியில் சமூகப்பணியாளர்களின் கவனம் திசை திரும்பியதை, அதன் பின்னணியை 'சோரம் போன தேவதைகள்' (How Social Work Has Abandoned it's Mission - Unfaithful Angels) என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார். இவருடைய எழுத்துக்களும், புத்தகங்களும் சமூகப்பணியின் சமுதாயப் பொறுப்புக்களை எடுத்துக்கூறும் விதமாக அமைந்தவை. இவர் தன்னுடைய பேராசிரியப் பணியையும் கடந்து, பெர்க்கிலி பல்கலைக்கழகத்திற்கும், சமூகத்திற்கும் செய்த பங்களிப்பால் இவரை சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்தது.
English
Social work educator and author, he was first exposed to social workers during his impoverished childhood, then entered the profession as a settlement house group worker and later a researcher for Mobilization for Youth. A professor and long-time dean at the University of California-Berkeley (where he was awarded the Berkeley Citation), he coauthored influential social work books on social welfare policy, community organization, and the mission of the profession.