special education

சிறப்புக்கல்வி

தமிழ் விளக்கம்

விதிவிலக்கான, மாற்றுத்திறனுடைய, அசாதாரணமான குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களின் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்படுத்தப்பட்ட பள்ளிகள், போதனாமுறைகள், பயிற்சிகள், மற்றும் பிற உதவிகளைக் குறிக்கும். இருப்பினும் இது பார்வைக் குறைபாடு, செவித்திறன் பாதிப்பு, உடல் ஊனம், அறிதிறன் இயலாமை, மன வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், மீத் திறன் படைத்த குழந்தைகளுக்குமான கற்றல் வசதிகளையே பொதுவாகக் குறிக்கின்றது.

English

Any form of schooling, training, tutoring, or other educational formats to meet the needs of exceptional children and adults. The term has been most commonly applied to educational programs for people with visual impairments, hearing impairments, physical disabilities, cognitive disturbances, mental retardation, advanced talents, or intellectual giftedness.