special-needs adoption
சிறப்புத் தேவையுள்ள குழந்தைகள் தத்தெடுப்பு
தமிழ் விளக்கம்
வயதான குழந்தைகளோ, உடன் பிறந்தவர்களுடன் இருக்கும் குழந்தைகளோ, கருப்பினக் குழந்தைகளோ அல்லது உடல் ரீதியாக, உள ரீதியாக அல்லது வளர்ச்சிப் பருவக் குறைபாட்டாலோ அதிகக் கரிசனம் தேவைப்படும் பிரத்யேகத் தேவையுள்ள குழந்தைகளைத் தத்தெடுக்கும் நடைமுறை. இந்தக் குழந்தைகள் எளிதாக தத்தெடுக்கப் படமாட்டார்களாதலால், இவர்களைத் தத்தெடுக்க அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலமும் சிறப்புச் சட்டங்களையும், திட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதுமாதிரியான குழந்தைகளுக்கு தத்துப் பெற்றோர் கிடைக்காத பட்சம் நிறுவனங்களே தத்தெடுக்கும்படியான நிதி உதவியை குழந்தைகள் நலம் மற்றும் தத்தெடுப்பு உதவிச் சட்டம் - 1980 மூலமாக அரசே விதிமுறைகளை வகுத்து உதவி செய்கிறது.
English
Adoption of children who have extenuating conditions or circumstances (such as older children; siblings; children of color; or children who have special physical, emotional, or developmental needs). Each state establishes its own definition of children with special needs. The Adoption Assistance and Child Welfare Act of 1980 (Pl. 96-272) provides funding and services for eligible children with special needs if they cannot be placed with adoptive parents without such assistance.