special-needs clients
பிரத்யேக / சிறப்புத் தேவையுள்ள வாடிக்கையாளர்
தமிழ் விளக்கம்
உடல், மன வளர்ச்சி குன்றியதாலோ அல்லது வேறு பிரச்சனைகளாலோ, தங்களுடைய இயல்பு நிலைக்குத் திரும்ப விரும்புவர்களுக்கு, சாதாரண உதவிகளோடு பிரத்யேகத் தேவைகளின் உதவிகளும் தேவைப்படும். எடுத்துக்காட்டாக குடும்ப / தாம்பத்தியச் சிகிச்சைக்கு வரும் தம்பதிகளில் மனைவிக்கு மூளை, தண்டுவட மரப்பு நோய் (உடலில் உள்ள திசுவின் ஒரு பகுதி இறுகிப் போதல், திசு தடிமனாதல்) இருக்கும் பட்சத்திலோ அல்லது தத்துக் கொடுக்கவுள்ள குழந்தைக்கு நாலங்க வாதம் என்னும் கை கால் செயலிழப்பு இருந்தாலோ அவர்கள் சிறப்புத் தேவையுள்ள வாடிக்கையாளர் என்று கருதப்படுவர்.
English
People who, by reason of some mental or physical disability, require additional or different kinds of assistance to achieve their goals in seeking social services. For example, a couple seeks marital therapy and the wife has multiple sclerosis, or a child entering the adoption system has quadriplegia.