spending down
செலவிட்டுக் கரைத்தல், பொருள்கள் வகையில் பயன்படுத்தித் தீர்த்தல், வழங்கித் தீர்த்தல், கைதுறந்து விடுதல், வீணாக்கி விடுதல் ஆற்றல் வகையில் பயன்படுத்திக் கழித்தல், உரம் அழியச் செய்தல்
தமிழ் விளக்கம்
ஒருவருடைய வருமானம் குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது, அவர் சில சமூகக் காப்பீட்டுத் திட்ட பலன்களைப் (குறிப்பாக medicaid எனும் மருத்துவ உதவி) பெறும் தகுதியை இழப்பதால், கூடுதல் வருமானத்தை வேண்டுமென்றே, திட்டமிட்டுச் செலவழித்து, குறிப்பிட்ட அளவிற்குள் வைத்துக்கொள்ளும் முயற்சியைச் செலவிட்டுக் கரைத்தல் எனப்படுகிறது.
பார்க்க: Medic aid - மருத்துவ உதவி - மருத்துவமனை சென்று சிகிச்சை பெற செலவழிக்க இயலாதவர்கள் என்று தகுதிச் சோதனைகள் மூலம் (குறைந்த வருவாய்ப் பிரிவினர்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசே மருத்துவச் சிகிச்சைக்கான செலவினங்களைத் தந்துதவும் திட்டம். சுகாதாரப் பணிகள் நிதியத்தின் மேற்பார்வையில், அமெரிக்காவின் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் உள்ளாட்சி அமைப்புகள் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துகின்றன. துணை வருமானப் பாதுகாப்பு திட்டப் பயனாளிகள், அந்தந்தப் பகுதி சமூகப்பாதுகாப்பு அலுவலகங்கள் மூலம் இந்த திட்டத்தின் பயனைப் பெறுவர்.

English
An individual's intentional attempt to reduce total assets and income to be eligible for certain means-tested social insurance benefits. For example, a person who has a substantial amount of money in the bank would be ineligible for Medicaid; therefore, he or she would dispose of the funds to become eligible for Medicaid.