spina bifida
முதுகெலும்புப் பிளவு
தமிழ் விளக்கம்
கரு வளரும் போது முதுகுவடத்தில் உள்ள முள்ளந்தண்டு சரியாக மூடாமல் போய்விடுகின்ற மரபணுக் கோளாறு. இந்தக் கோளாறால் மனவளர்ச்சி பாதிக்கப்படும் மற்றும் hydrocephalus என்ற மூளையில் நீர்க்கோவை ஏற்பட்டு வேறு சிக்கல்களுக்கு இட்டுச் செல்லும். இந்தக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் எலும்பியல், நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு, மருத்துவக் கவனிப்பும் மற்றும் சமூகநலத் திட்ட உதவிகளும் தேவைப்படும்.
English
Failure of the spinal column to close properly during early fetal development. The disorder is frequently associated with other problems such as mental retardation and hydrocephalus and its complications. People afflicted with this disorder often require orthopedic, neurological, hospital, and other medical care and social services throughout their lives.