spiritual counseling
ஆன்மீக ஆலோசனை
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளரின் மத நம்பிக்கையினடிப்படையில் உருவான நல்லொழுக்கம், பக்திபூர்வமான உணர்வெழுச்சியை மையப்படுத்திக் குறை தீர்க்கும் (பிணியகற்றும்) சிகிச்சை / ஆலோசனை. மத குருமார்கள் இம்முறைக்கு முன்னோடியாக வழிகாட்டியிருந்தாலும், சமூகப்பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் குறையறியும் மற்றும் குறைதீர்க்கும் முறைகளைக் கையாள்வது, ஒருவகையில் இனம்சார்ந்த, பாலியல் சார்ந்த குறைதீர்க்கும் அணுகுமுறைகளைப்போல தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தயக்கம் காட்டினார்கள். இருப்பினும், தங்கள் வாடிக்கையாளர்களில் பலருக்கு மத நம்பிக்கைகளே அவர்களுடைய பிரச்சனைகளைச் சமாளிக்கும் ஆற்றலை வழங்குவதை அறிந்திருப்பதால், இந்த ஆற்றல் சமூகப்பணியின் நோக்கமான, வாடிக்கையாளர்களின் தன்னுதவிக்கு உதவுவதாலும், அவர்களின் மனநலத்திற்கு உதவுவதாலும் சமூகப்பணியாளர்கள் ஆன்மீக ஆலோசகார்களின் வழிகாட்டுதலை தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான நேரத்தில் பரிந்துரைக்கின்றார்கள்.
English
Professional clinical intervention with an orientation to the client's moral, emotional, and religious perspective. Pastoral counselors have led the helping professions in this orientation, and many social workers consider a rejection of a client's spiritual and religious values to be as harmful as racism or sexism. Social workers recognize that many of their clients use spirituality as an important component in coping, and this practice is consistent with the social work goal of helping clients meet their basic needs and achieve mental health. See also transpersonal social work.