spirituality
ஆன்மீக உணர்வு, ஆன்மிகம்
தமிழ் விளக்கம்
ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும். அது மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஒரு உயிரினமாக மட்டும் கருதாமல், பொருள்சார் உலகையும் காலத்தையும் கடந்ததாகக் கருதப்படும் ஒன்றோடு, அதாவது ஆன்மாவோடு தொடர்புடையதாகக் கருதுகின்றன. ஆன்மிகம் என்பது, பொருள் சார்ந்த, உலகியல் விடயங்களுடன் முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. அது மனம் கடந்த பெருநிலையை உணர்த்துவதாகும்.
English
Devotion to the immaterial part of humanity and nature rather than worldly things such as possessions; an orientation to people's religious, moral, or emotional nature.