splitting
பிளவுபட்டிருத்தல்
தமிழ் விளக்கம்
உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி, தன்னுடைய மன நலத்திற்கு ஆபத்தான உணர்வுகளை அடக்கிக் கொள்வது அல்லது அது தன்னுடையதல்ல என்று விடுபட முயலும் முதிர்ச்சியற்ற உளப்பாதுகாப்பு முறை. சுருக்கமாக பிளவுபட்ட ஆளுமைக் கோளாறு. இந்த உணர்வுகள் தொடரும் பட்சத்தில், தன்னுடைய சுயத்திலிருந்து / இயல்புத் தன்மையிலிருந்து விலகி, அவருடைய ஆளுமை பிளவுண்டு சிதறும்.
பார்க்க: Dissociative Personality Disorder - பிளவுபட்ட அடையாளச் சிக்கல் / சீர்கேடு, பிளவுப்பட்ட ஆளுமைச் சீர்கேடு, பல்வகை ஆளுமைச் சீர்கேடு - இரண்டு மூன்று ஆளுமைகளாகப் பிளவுபட்ட, பன்முகப் பிளவுண்ட ஆளுமைக் கோளாறு, பிளவுபட்ட அடையாளக் கோளாறு என்றழைக்கப்படுகின்றது. இக்கோளாறுள்ளவர்கள் தங்களிடம் ஒன்றிற்கு மேற்பட்ட பிளவுண்ட ஆளுமை / அடையாளங்கள் இருப்பதையும், அது ஒன்றின்மீது இன்னொன்று ஆதிக்கம் செலுத்துவதையும், ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டு வெளிப்படுவதையும் அறியமுடியா நிலையில் இருப்பார்கள். நூற்றுக்கு மேற்பட்ட பிளவுண்ட அடையாளங்களில் பெண்களிடம் சராசரியாக 15 வகையான அடையாளங்களும், ஆண்களிடம் எட்டுக்கு மேற்பட்ட அடையாளங்களும் தென்படும். இந்த அடையாள மாற்றங்கள் மெதுவாகவோ அல்லது கண்ணிமைக்கும் நேரத்திலோ மாறிமாறி வெளிப்படலாம்.

English
In psychoanalytic theory, a primitive defensive process in which the individual is thought to repress, dissociate, or disconnect important feelings that have become dangerous to his or her psychic well-being. This may cause the person to get out of touch with his or her feelings and to develop a "fragmented self".