squatter's rights

தங்கியிருப்பவர்களுக்கான உரிமை, அனுபவ உரிமை, எதிர் அனுபோகம், எதிர் நிலை உடைமை

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு இடத்தையோ அல்லது கட்டிடத்தையோ உபயோகப்படுத்திவரும் / அனுபவித்து வரும் ஒருவருக்கு அதன் மீது உரிமையுண்டு என்ற நிலைப்பாடு. கடந்த காலத்தில் இந்த நடைமுறை சில இடங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது இது சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நடைமுறை அல்ல. இருப்பினும் நகர்ப்புறக் குடியிருப்புகளில், பாழடைந்த கைவிடப்பட்ட கட்டிடங்களை மராமத்து செய்து நீண்டகாலம் தங்கியிருந்தது, அது உறுதி செய்யப்படும் பட்சம், அதன் மீது அனுபவ உரிமை கோரி அதை உரிமையாக்கிக்கொள்ள முடியும் என்பதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன. இருப்பினும் இது சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததால் கிடைத்த உரிமை அல்ல.

English

The presumed entitlement of a person to own land or buildings merely by occupying them for a specified length of time. Such "rights" no longer have legal validation as they once did in some jurisdictions. However, in various forms of urban homesteading, people who occupied and restored abandoned buildings have claimed legal title and received it, but not on the basis of squatter's rights.