St. Vincent de Paul Society
செயின்ட் வின்சென்ட் தே பவுல் சபை
தமிழ் விளக்கம்
புனித வின்சென்ட் தே பவுல் (1581– 1660) கத்தோலிக்கத் திருச்சபையில் வாழ்ந்த, ஏழைகளுக்குத் தொண்டு செய்யத் தன்னையே அர்ப்பணித்த ஒரு குரு ஆவார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையிலும், ஆங்கிலிக்க ஒன்றியத்திலும் புனிதராகப் போற்றப்படுகிறார். இவருக்கு 1737 ல் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 1833ல், அருளாளர் ஃப்ரடெரிக் ஓசானம் இவரது பெயரால், ஏழைகளுக்கு உதவி செய்யும் பிறரன்பு அமைப்பாக புனித வின்சென்ட் தே பவுல் சபையை நிறுவினார். இந்தச் சபை இன்று 132 நாடுகளில் உள்ளது.
English
An international Catholic lay group established in France in 1833 by Antoine Frederic Ozanum to provide financial relief, counseling, and social services for needy people. The organization has local centers in most nations with significant Catholic populations, including the United States.